தரமட்டத்துக்கு எறங்கீட்டாங்க! இவ்ளோ கம்மியான விலையில் ஹோண்டா பைக்கா! ஷோரூம்ல கூட்டம் அலை மோதிகிட்டு இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர்களில் ஒன்று ஹோண்டா ஷைன் (Honda Shine). 125 சிசி மற்றும் 100 சிசி என 2 வெர்ஷன்களில் விற்பனையாகி வரும் ஹோண்டா ஷைன் பைக்கின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 1,49,697 ஷைன் பைக்குகளை விற்பனை செய்து பிரம்மிக்க வைத்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 1,14,142 ஆக மட்டுமே இருந்தது. அதாவது 35,555 ஹோண்டா ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 டூவீலர்களின் பட்டியலில், ஹோண்டா ஷைன் 3வது இடத்தில் உள்ளது.

Honda Shine 100

முதல் இடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கும், 2வது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரும் உள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹோண்டா நிறுவனம் 125 சிசி மற்றும் 100 சிசி என 2 வெர்ஷன்களில் ஷைன் பைக்கை விற்பனை செய்து கொண்டுள்ளது.

இதில் ஹோண்டா ஷைன் 125 பைக்கில், 123.94 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.9 kW பவர் மற்றும் 11 N-m டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Honda Shine 100 Delivery

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஆரம்ப விலை 82,950 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 86,950 ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரும் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹோண்டா ஷைன் பைக்கை இதை விட குறைவான விலையில் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், 100 சிசி வெர்ஷனை தேர்வு செய்யலாம். ஹோண்டா ஷைன் 100 பைக்கில், 98.98 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.43 kW பவர் மற்றும் 8.05 N-m டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஷைன் 100 பைக் தற்போதைய நிலையில், 66,600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே விற்பனையில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor), பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125), டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், இவை இரண்டும் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்கள் ஆகும்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான பைக் என்றால், அது ஷைன் 100 பைக்தான். எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு ஹோண்டா பைக்கை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 22, 2024, 22:35 [IST]
English summary
Honda shine sales report august 2024 price rivals
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+