45 கிமீ மைலேஜ் தரும் செம ஸ்கூட்டரை களம் இறக்கப்போகும் ஹோண்டா! ஆக்டிவா மார்கெட் காலி!

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம்தான் ஸ்கூட்டர் செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஆக்டிவா என்ற ஸ்கூட்டருக்கு போட்டியாக மார்க்கெட்டில் வேறு ஸ்கூட்டர் இல்லை என்று சொல்லிவிடலாம். கடந்த ஏப்ரல் மாதம் கூட 2.60 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. அந்த அளவிற்கு மக்கள் மனதை ஈர்த்த இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அந்நிறுவனமே புதிதாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது.

நாம் ஏற்கனவே சொன்னது படி ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் தற்போது சிறப்பாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டராக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றதாக இருக்கிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் புதிய ஸ்கூட்டர்களுக்கான தேடல் ஏற்பட்டுள்ள நிலையில், அதை பூர்த்தி செய்யும் வகையில் ஹோண்டா நிறுவனம் 160 சிசி செக்மெண்டில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

honda stylo 160

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கு ஸ்டைலோ 160 என பெயர் வைத்துள்ளது. இது பவர்ஃபுல்லான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தோனேசியா மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்திய மார்க்கெட்டில் யமஹா நிறுவனத்தின் ஏர்ராக்ஸ் 155 என்ற ஸ்கூட்டர் மட்டுமே இந்த செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. விரைவில் ஹீரோ நிறுவனம் தனது ஜூம் ஸ்கூட்டரின் 160 வெர்ஷனை வெளியிடப் போகிறது.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டைலோ 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் பட்சத்தில் மார்க்கெட்டில் உள்ள ஹீரோ ஜூம் 160 மற்றும் யமஹா ஏர்ராக்ஸ் 155 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டைலோ 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு மக்கள் பலர் இந்த ரக ஸ்கூட்டர்களை வாங்க விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.

honda stylo 160

முக்கியமாக இளைஞர்களுக்கு இந்த ஸ்கூட்டர் நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர்ஃபுல்லான ஸ்கூட்டராக இருப்பதால் இந்திய சாலைகளில் இந்த ஸ்கூட்டர் மூலம் சிறப்பாக பயணம் செய்ய முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. இது மட்டுமல்ல இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிங்கை பொறுத்தவரை இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான அம்சங்கள் இருக்கும். படியும் அதே நேரம் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் இந்த ஸ்கூட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் ஸ்டைல 160 ஸ்கூட்டர் பொறுத்தவரை வட்ட வடிவிலான ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக சிங்கிள் பீஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஸ்ட்ராங்கான கிராப் ரெயில்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் முழுமையாக எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக டிஜிட்டல் கண்ட்ரோல், கீ லெஸ் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் மற்றும் யூஎஸ்பி சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளன.

honda stylo 160

ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை டெலஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் முன்பக்கமும், மேனோ ஷாக் அபசர்பர் சஸ்பென்ஷன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது எல்லாம் இந்தோனேசியாவில் விற்பனையாகி வரும் ஸ்கூட்டரின் மாடல் தான். இந்தியாவிற்கு இந்த ஸ்கூட்டர் வரும்போது இந்தியா டிரெண்டிற்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜினை பொருத்தவரை 156.9 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 16 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த இன்ஜின் லிட்டருக்கு 45 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் இந்த ஸ்டைலோ 160 ஸ்கூட்டரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 12 இன்ச் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஸ்கூட்டர் 118 கிலோ எடை தான் இருக்கும். இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 1.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் 160 சிசி செக்மெண்ட்டில் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவது மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்படப்போவதை வெளிக்காட்டுகிறது. தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இனி பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் அதிக பவர்ஃபுல்லான ஸ்கூட்டர்களை தான் தேர்வு செய்வார்கள் என்ற கணிப்பு இருக்கிறது. இந்த கணிப்பிற்காக தற்போதே திட்டமிட்டு அந்நிறுவனம் இந்த ஸ்கூட்டரை களம் இறங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 22:26 [IST]
English summary
Honda stylo 160 scooter india expectations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X