ஆக்டிவாவை எல்லாம் ஓரமா போடுங்க! ஹோண்டாவின் இந்த புது ஸ்கூட்டரை தான் ஊரே வாங்கப்போகுது!

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் சர்வதேச அளவில் உள்ள தனது ஸ்கூட்டர் லைனில் புதிதாக ஸ்டைலோ 160 என்ற நியோ ரெட்ரோ வடிவ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தோனேஷியாவில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை இந்தியாவிற்கும் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது 110 சிசி மற்றும் 125 சிசி செக்மெண்ட்களில் தான் அதிகமாக ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் மார்க்கெட் விரிவடைய விரிவடைய மக்கள் மத்தியில் இன்னும் பவர்ஃபுல்லான ஸ்கூட்டர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மார்க்கெட்டில் யமஹா நிறுவனம் ஏராக்ஸ் 155 என்ற ஸ்கூட்டரையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூம் 160 என்ற ஸ்கூட்டரையும் விற்பனை செய்து வருகிறது.

Honda stylo 160

இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக தற்போது ஹோண்டா நிறுவனம் தனது சர்வதேச மார்க்கெட்டில் உள்ள ஸ்டைலோ 160 என்ற ஸ்கூட்டரை இந்தியாவில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கான வடிவமைப்புக்கான காப்புரிமை கேட்டு அந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இந்த தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளன.

இந்த ஹோண்டா ஸ்டைலோ 160 ஸ்கூட்டரை பொறுத்தவரை நியோ ரெட்ரோ வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் ஆகும். இதன் முன்பக்கம் உள்ள எல்இடி ஹெட்லைட் ஹெக்ஸாகோனல் வடிவமைப்பில் இருக்கிறது. முக்கியமாக இதன் சைடு மிரர் வட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சி வடிவ எல்இடி மற்றும் பின்பக்கம் எட்ஜி அமைப்பிலான எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் சீட்டுகள் சொகுசு நிறைந்ததாகவும், இதன் கிராப் ரெயில் ஸ்டிராங்காகவும் வழங்கப்பட்டுள்ளன.

Honda stylo 160

இந்த ஸ்கூட்டரின் அட்டகாசமான வடிவமைப்பு பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் இந்த ஸ்டைலோ 160 ஸ்கூட்டர் மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. ராயல் கிரீன், ராயல் மேட் ஒயிட், ராயல் மேட் பிளாக், கிளாம ரெட், கிளாம் பிளாக், மற்றும் கிளாம் பேஜ் ஆகிய நிறங்களில் இது விற்பனையாகி வருகின்றன. இதில் ஏபிஎஸ் வெர்ஷனும் இருக்கிறது, சிபிஎஸ் வெர்ஷனும் இருக்கிறது.

இதில் ராயல் என்ற பெயரில் கலர் ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டர்களில் எல்லாம் சீட் பிரவுன் நிறத்தில் கான்ட்ராஸ்ட் நிறமாக, பார்க்கும் கண்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்பக்க ஃபோர்க் மற்றும் கிரப் ரெயில்கள் எல்லாம் சில்வர் ஃபினிஷில் வழங்கப்பட்டுள்ளன. ராயல் என பெயர் தொடங்காத கலர் ஆப்ஷன் எல்லாம் கருப்பு நிற சீட் மற்றும் கிரப் ரெயில்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

Honda stylo 160

இந்த ஸ்டைலோ 160 ஸ்கூட்டரின் முன்பக்கம் புதிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடிகாரம், எரிபொருள் செலவு, ட்ரிப்மீட்டர், ஸ்பீடோமீட்டர், பேட்டரி இன்டிகேட்டர், ஸ்மார்ட்கீ, ஆயில் சேஞ்ச் ஸ்டேட்டஸ், ஏபிஎஸ் இண்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்கீ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான எலெக்ட்ரிக் இக்னீசியன், எலெக்ட்ரிக் ஹேண்டில் பார் லாக்கிங் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கீ சிஸ்ட்ம் ஆண்டிதெஃப்ட் அலாரமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த ஸ்கூட்டர் ஏபிஎஸ் உடன் 118 கிலோ எடையும், ஏபிஎஸ் இல்லாமல் சிபிஎஸ் உடன் 115 கிலோ எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் பொருத்தவரை 151 மிமீ உயரம் வழங்கப்பட்டுள்ளது. சீட்டு உயர்த்தை பொறுத்த வரை 768 மீமி உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹோண்டா ஸ்டைலோ160 ஸ்கூட்டர் இன்ஜினை பொறுத்தவரை 156.9சிசி லிக்விட் கூல்டு, 4வால்வு இஎஸ்பி பிளஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.4பிஎஸ் பவரையும், 13.8என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மூலம் இந்த ஸ்கூட்டர் 45 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 1.50 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்றளவும் சிறப்பாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டராக அந்த ஸ்கூட்டர் தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் பவர்ஃபுல்லான ஸ்கூட்டரை விரும்பினால் ஹோண்டா நிறுவனத்தின் இந்த ஸ்டைலோ 160 ஸ்கூட்டர் நிச்சயம் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2024, 14:24 [IST]
English summary
Honda stylo 160 scooter patent applied launch soon in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X