ஹோண்டா ஆக்டிவாவின் உற்பத்தியை நிறுத்த போகுதா!.. சீக்கிரமே வேணும்றவங்க வாங்கி போட்டுடுங்க! அப்புறம் கிடைக்காது!
ஹோண்டா நிறுவனம் விரைவில் ஆக்டிவா ஸ்கூட்டரின் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கூட்டரின் உற்பத்தியை மட்டுமில்லைங்க, ஒட்டுமொத்த எரிபொருளில் இயங்கும் எஞ்சின் கொண்ட இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியையும் அது நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் வாயிலாக, ஹோண்டா முழுக்க முழுக்க பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் பைக் விற்பனையை கைவிட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 2040 ஆம் ஆண்டிலேயே இந்த பணியில் அது களமிறங்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகினறன.
எரிபொருள் எஞ்சின் கொண்ட டூ-வீலர்களின் உற்பத்தியை கை விட்ட பின்னர் அது முழுக்க முழுக்க மின்சார இரண்டு சக்கர வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கும் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாகவே அந்நிறுவனம் தொடக்க புள்ளியை வைக்கும் பொருட்டு இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

நடப்பு 2024 ஆம் ஆண்டிலேயே அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என கூறப்படுகின்றது. ஹோண்டா நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றிய ஆவணங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளன. இந்த ஆவணங்களின் வாயிலாகவே ஹோண்டாவின் வருங்கால நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில், 2025 ஆம் ஆண்டிற்குள் அது பத்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் டூ-வீலர்களை உலக அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் எலெக்ட்ரிக் பைக்கும் அடங்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், மின்சார வாகனம் விஷயத்தில் மிகப் பெரிய திட்டத்தை ஹோண்டா கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 1 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இந்த எண்ணிக்கையை 2030 ஆம் ஆண்டிற்கு அது 3.5 மில்லியனாக உயர்த்தவும் பிளான் போட்டு வைத்திருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் முதலில் இந்தியாவில் ஆக்டிவாவை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த தகவலை ஹோண்டா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. விரைவில், இதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. ஹோண்டா ஆக்டிவா இவி விற்பனைக்கு வரும் எனில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகப் பெரிய தலை வலியான சூழல் ஏற்படக் கூடும்.
அதற்கு மட்டுமல்ல டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஏத்தர் உள்ளிட்டவர்களுக்கும் அதன் வருகை மிகப் பெரிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் டூ-வீலர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இதில் மின்சார வெர்ஷன் என்பது இப்போதே பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா இந்த ஆண்டிற்குள் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி இருக்கின்றது. அதில் ஒன்றாக ஹோண்டா ஆக்டிவா இவியாகக் கூட இருக்கலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக தற்போது மாறியிருக்கின்றது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஆகும். விரைவில் அது என்ன எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் என்கிற விபரங்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹோண்டா நிறுவனம் விரைவில் அதன் எலெக்ட்ரிக் டூ-வீலரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாக இருக்கின்றது. இந்த தகவலைத் தொடர்ந்து இந்தியர்களின் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகி இருக்கின்றது என கூறலாம்.


Click it and Unblock the Notifications








