ஹோண்டா ஆக்டிவாவை மிஞ்ச இனி தான் எதாவது ஸ்கூட்டர் பொறந்து வரனும்... ஊரில் பாதி பேர் இதை தான் வாங்குறாங்க!!
ஹோண்டா மோட்டார் (Honda Motor), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. ஹீரோ மோட்டோகார்பில் இருந்து பல வருடங்களுக்கு முன்னரே பிரிந்துவந்த போதிலும், இப்போதும் ஒவ்வொரு மாதமும் 4 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரையிலான 2-வீலர்களை ஹோண்டா அசால்ட்டாக விற்பனை செய்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மாதத்திற்கு மாதம் ஹோண்டா 2-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலர்கள் குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 91,678 இரு சக்கர வாகனங்களை ஹோண்டா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 4 லட்சத்து 38,163 2-வீலர்களை மட்டுமே ஹோண்டா மோட்டாரால் விற்பனை செய்ய முடிந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட்டிலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஹோண்டா 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் 4 லட்சத்து 39,118 இரு சக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா மோட்டார் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. வழக்கம்போல், கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலராக ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. 110சிசி மற்றும் 125சிசி என்ஜின் உடன் கிடைக்கும் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 27,458 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஹோண்டா மோட்டாரின் மொத்த விற்பனையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் பங்களிப்பு மட்டும் 44.54% ஆகும். மீதி 55.46% மட்டும் தான் மற்ற ஹோண்டா 2-வீலர்கள் ஆகும். இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 14,872 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 95,604 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்டா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது.

ஆக்டிவாவிற்கு அடுத்து அதிகம் விற்பனையாகும் ஹோண்டா 2-வீலராக 2வது இடத்தில் ஹோண்டா ஷைன் 125 பைக் உள்ளது. கடந்த மாதத்தில் 1 லட்சத்து 49,697 ஷைன் 125 மற்றும் எஸ்பி125 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்திலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான ஷைன் 125 பைக்குகள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், 2023 ஆகஸ்ட்டில் 1 லட்சத்து 14,142 ஷைன் 125 மற்றும் எஸ்பி125 பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.
3வது இடத்தில் ஆக்டிவாவிற்கு அடுத்து பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டரான டியோ உள்ளது. 2023 ஆகஸ்ட்டில் 28,961 டியோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 34,705 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4வது மற்றும் 5வது இடங்களில் முறையே யூனிகார்ன் (31,451) மற்றும் ஷைன் 100 (25,334) உள்ளன. 2023 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் 22 யூனிகார்ன் பைக்குகள் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் இருப்பது ஷைன் 125 பைக் மற்றும் 5வது இடத்தில் இருப்பது ஷைன் 100 பைக் ஆகும். 2023 ஆகஸ்ட்டில் ஷைன் 100 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்திருந்தது. இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தில் ஹோண்டா ட்ரீம் பைக் 7,713 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 7வது இடத்தில் உள்ள லிவோ பைக் ஆனது கடந்த மாதத்தில் 5,092 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா ட்ரீம் மற்றும் லிவோ பைக்குகளின் இந்த விற்பனை எண்ணிக்கைகள் வழக்கத்தை காட்டிலும் சில நூறு யூனிட்கள் அதிகம் ஆகும்.
இந்த லிஸ்ட்டில் 8வது இடத்தில் இருப்பது ஹோண்டா எஸ்பி160 பைக். 2023 ஆகஸ்ட்டில் 2,278 எஸ்பி160 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 4,858ஆக பதிவாகி உள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் ஹோண்டா ஹைனெஸ் 350 மற்றும் சிபி350 என்கிற 350சிசி பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,653 மற்றும் 1,459 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எண்ணிக்கைகள் யாவும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த 2-வீலர்கள் உடையது ஆகும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஹோண்டா 2-வீலர்களின் எண்ணிக்கையையும் சேர்ந்தால் இன்னும் சில லட்சம் அதிகமாக செல்லும். இதில் இருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார் நிறுவனம் இந்தியாவை எந்த அளவிற்கு சார்ந்துள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









