ஹோண்டாவுக்குள்ள இப்படி ஒரு திறமையா! பிஎம்டபிள்யூவுக்கே டஃப் கொடுக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர் வெளியீடு!

பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) இத்தாலியில் உள்ள மிலன்-இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஐசிஎம்ஏ 2024 (EICMA 2024) வாகன கண்காட்சியை பயன்படுத்தி தன்னுடைய வருங்கால தயாரிப்புகள் சிலவற்றை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அவற்றில், இவி ஃபன் கான்செப்ட் (EV Fun Concept) மற்றும் இவி அர்பன் கான்செப்ட் (EV Urban Concept) ஆகிய இரண்டு மின்சார கான்செப்ட் மாடல்களும் அடங்கும். இந்த இரண்டையும் எதிர்காலத்தில் ஹோண்டா நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள் 30க்கும் மேற்பட்ட மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே கணிசமான எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அது தற்போது காட்சிப்படுத்தி இருக்கின்றது. எனவே அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இரண்டும் உற்பத்திக்கு அனுப்பப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நம்பப்படுகின்றது.

Honda unveils ev fun concepts

ஃபன் கான்செப்ட்: இது ஓர் எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகும். ஹோண்டா நிறுவனம் இந்த மின்சார பைக்கை 2025 ஆம் ஆண்டிற்குள் உலக சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும்.

அதிர்வுகள் இல்லாமல் இயங்குவதற்கு பெயர்போனவையாக ஹோண்டாவின் தயாரிப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் பைக்கும் அதே திறன் கொண்டதாகவே இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆன் ஆகுவதே தெரியாது அந்த அளவிற்கு ஸ்மூத்தாக இருக்கும் என கூறப்பட்டு இருக்கின்றது. இது மின்சார வாகனங்களின் பொதுவான இயல்பே ஆகும்.

Honda unveils ev fun and ev urban concepts

முற்றிலும் தனித்துவமான தோற்றம் மற்றும் அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த வாகனத்தையும் ஹோண்டா தயார் செய்திருக்கின்றது. இதன் ஹெட்லைட் ஹாலிவுட் ரோபோ வாகனங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்த பைக்கில் நிலையான பேட்டரிகளே பயன்படுத்தப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதனை சிசிஎஸ்2 வகை சார்ஜிங் பாயிண்டுகளில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

ஆகையால் விரைந்து இதனை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என தெரிகின்றது. ஓர் முழு சார்ஜில் 100 கிமீ முதல் 150 கிமீ வரையில் ரேஞ்ச் தரக் கூடியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், உறுதியான தகவல் அல்ல. விரைவில், இந்த வாகனம் பற்றிய அனைத்து விபரங்களையும் ஹோண்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவி அர்பன் கான்செப்ட் (EV Urban Concept): பிரபல பிரீமியம் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் சமீபத்தில் சிஇ 04 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஸ்கேட்போர்டு ஸ்டைலில் அதன் லுக் இருக்கும்.

இத்தகைய ஸ்டைலை அப்படியே ஹோண்டாவின் இவி அர்பன் கான்செப்ட்-ம் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், சில தனித்துவமான அம்சங்களை இந்த வாகனம் தாங்கியிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த வாகனம் ஓர் உள்ளுணர்வுக் கொண்டது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ரைடருடன் இணைந்து செயல்படும் நோக்கில் இந்த அம்சத்தை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, ஹோண்டா தான் சொந்தமாக தயாரித்த பேட்டரி பேக்கையே இதில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதுதவிர, அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இது தாங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் அமைப்பும் உள்ளது. ஆனால், இந்த வாகனத்தை பற்றிய வேறு எந்த விபரத்தையும் ஹோண்டா வெளியிடவில்லை. விரைவிலேயே இவி அர்பன் மற்றும் இவி ஃபன் ஆகிய இரண்டு கான்செப்ட்டுகளின் முக்கிய தகவல்கள் அனைத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்காகவும் சில பிரத்யேக திட்டங்களை வகுத்து இருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் டூ-வீலர் இந்தியாவிற்கானதாகவே இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியர்களின் மனம் புரிந்து உருவாக்கப்பட்ட ஓர் மின்சார இரண்டு சக்கர வாகனத்தையே அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 22:45 [IST]
English summary
Honda unveils ev fun and ev urban electric two wheeler concepts at eicma 2024
மேலும்... #honda motorcycle #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+