சோத்து மூட்டைகளை இனி தோளுல சுமந்துட்டு போகணும்ற அவசியம் இல்ல! 3 வீலுடைய இதை தீபாவளிக்கு புக் பண்ணிக்கலாம்!
மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம், பெய்கோ (BeiGo) எனும் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. பிரத்யேகமாக டெலிவரி சேவைக்கு என்றே உருவாக்கப்பட்ட ஓர் தனித்துவமான எலெக்ட்ரிக் வாகனமே இதுவாகும். ஒருவர் மட்டுமே இந்த வாகனத்தில் அமர்ந்து செல்ல முடியும். அதாவது, டெலிவரி பாயால் மட்டுமே இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். பின் பக்கத்தில் பெரிய பெட்டி போன்ற அமைப்பு அதில் வழங்கப்பட்டு இருக்கும்.
அது டெலிவரி பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். சுவிக்கி, சொமேட்டோ மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் டெலிவரி சேவையில் ஈடுபட்டு வருவோருக்கு இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும். இப்போதைய நிலவரப்படி டெலிவரி பாய்கள் அத்தியாவசிய பொருட்களை தங்களின் தோளில் சுமந்து வரும் சூழலையே காண முடிகின்றது.

இதைத்தொடர்ந்து அவர்கள் தோள்பட்டையில் தாங்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் எண்ணற்ற சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, வாகனத்தை ஹேண்டில் செய்யும்போது பல்வேறு சிக்கல்களுக்கு அவர்கள் ஆளாகுகின்றனர். இந்த மாதிரியான அவதிகளில் இருந்து விடுதலை வழங்கம் விதமாகவே ஐ-கோவைஸ் நிறுவனம் தன்னுடைய பெய்கோ-வை தயார் செய்துள்ளது.
எனவே இ-காமர்ஸ் (ஆன்லைன் வர்த்தக) நிறுவனங்களான பிக்பாஸ்கெட், ஃப்ளிப்கார்ட், சுவிக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவற்றின் மிகப் பெரிய தேவையை இந்த வாகனம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனத்தை அடுத்த 18 மாதங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைக்காக உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.
இதுதவிர, இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery as a Service) திட்டம் மற்றும் 'வெயிக்கிள் அஸ் எ சர்வீஸ்' (Vehicle as a Service) திட்டம் ஆகியவற்றின்கீழ் அதை விற்பனைச் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
இதில், பேட்டரி அஸ் எ சர்வீஸ் என்பது வாகனத்தை மட்டுமே உரிமைக் கொண்டாட முடியும். வாகனத்தில் வழங்கப்படும் பேட்டரிக்கு கிமீ பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணத்தை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும். வெயிக்கிள் அஸ் எ சர்வீஸ், திட்டமான ஒட்டுமொத்த வாகனத்தையே வாடகைக்கு எடுக்கக் கூடிய திட்டமாகும்.
ஆகையால், வாகனத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டிற்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வாகனத்தை வாங்குவதற்கு எந்தவொரு தனி கட்டணமும் செலுத்த வேண்டியிருக்காது. இந்த இரண்டு சேவைக்காக ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் தற்போது ஈவேட்-டெக் எனும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது. பெட்ரோல் வாகன பயன்பாட்டினால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் பல மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன.
ஏற்கனவே, அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் டெலிவரி சேவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்த நிலையிலேயே தற்போது ஐ-கோவைஸ் இந்த எலெக்ட்ரிக் டூ-வீலரை நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தை பயன்படுத்தினால் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
குறிப்பாக, பெட்ரோல் செலவை மிகப் பெரிய சிக்கனப்படுத்திக் கொள்ள முடியும் என அது கூறியிருக்கின்றது. அதேவேளையில், பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் பெய்கோ-வை ஐ-கோவைஸ் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், செல்ஃப் பேலன்ஸிங் அம்சம் மூன்று வீல்கள் வாயிலாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆமாங்க, பெய்கோ ஓர் மூன்று சக்கரங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் ட்ரைக் (Trike) வகை வாகனம் ஆகும். மூன்று வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பாதுகாப்பான ரைடுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். இத்துடன், இரண்டு வீல்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்சை தரக் கூடிய 3.6 kWh திறன் கொண்ட அல்ட்ரா ட்யூரபிள் எல்எம்எஃப்பி வகை பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதேவேளையில், இதன் பிரீமியம் வெர்ஷனில் 4.4 kWh டூயல் பேட்டரி பேக் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இத்தகைய திறன் கொண்ட எலெக்டரிக் வாகனத்தையே ஐ-கோவைஸ் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்த வாகனத்தின் ப்ரீ-புக்கிங் பணிகள் தீபாவளி அன்று தொடங்கப்பட இருக்கின்றது. முதலில் பெங்களூருவிலேயே தொடங்கப்படும் என நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இதற்கு பின்னரே அடுத்தடுத்தகட்டமாக சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த வாகனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மூன்று சக்கர ட்ரைக் ரக வாகனங்கள் பெரிய அளவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அந்த பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஐ-கோவைஸ் பெய்கோ நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








