விநோத தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலரின் டெலிவரி தொடங்கியது.. இவரே முதலில் ஓடி வந்து வாங்கியவர்!

இந்தியாவில் மின்சார வாகனம் (Electric Vehicle)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு பிரபல பிரீமியம் தர இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) சமீபத்தில் சிஇ 02 (CE 02) எனும் மொபட் வகை எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் டெலிவரி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த மின்சார வாகனத்தை புக் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் டெலிவரி பெறும் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ மோட்டாராட் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இந்த வாகனத்தை முதல் நபராக வந்து டெலிவரி பெற்றவரின் படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கின்றது. அந்த நபருக்கு மிகப் பெரிய கொண்டாட்டத்துடன் எலெக்ட்ரிக் டூ-வீலர் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அவ்வாகனம் டெலிவரி கொடுக்கப்பட்டு உள்ளது.

India s first bmw motorrad ce 02 delivered in kerala

கேரளாவிலேயே பிஎம்டபிள்யூ சிஇ 02 எலெக்ட்ரிக் மொபட் முதல் யூனிட்டின் டெலிவரி பணி மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. பிஎம்டபிள்யூ மோட்டாராட் இந்த வாகனத்தை முற்றிலும் தனித்துவமான தோற்றம் கொண்டதாக தயார் செய்து இருக்கின்றது. இந்த தோற்றத்தில் நாட்டில் வேறு எந்த எலெக்ட்ரிக் டூ-வீலரையும் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4.5 லட்சம் ஆகும். இந்த விலைக்கு ஏற்ப பலதரப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளையும், பிரீமியம் தர அம்சங்களையும் இந்த வாகனத்தில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வாரி வழங்கி இருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் மிக முக்கியமாக இந்த வாகனத்தை ட்யூப்ளர் ஸ்டீலைக் கொண்டு இதன் ஃப்ரேமை தயார் செய்திருக்கின்றது.

அத்துடன், 3.5 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த வாகனத்தில் அந்நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதுமட்டும் இல்லைங்க, சாவியே இல்லாமல் இந்த வாகனத்தில் பயணித்திக் கொள்ளவும் முடியும்.

இத்துடன், ரிவர்ஸ் மோட் மற்றும் பவர் சேவிங் மோட் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் பிஎம்டபிள்யூ சிஇ 02-வில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த வாகனத்தின் ரைடு அனுபவத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு ஃப்ளோ (Flow) மற்றும் சர்ஃப் (Surf) எனும் இரண்டு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன், ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 108 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய 3.9 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், 11 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிமீ ஆகும். மேலும், வெறும் 3 செகண்டுகளிலேயே இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தின் டெலிவரி பணிகளையே தற்போது பிஎம்டபிள்யூ இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிஎம்டபிள்யூ முதலில் சிஇ 04 மாடலையும், இதைத்தொடர்ந்து சிஇ 02 மாடலையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் டெலிவரி பணிகளையே தற்போது அது தற்போது தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 5:00 [IST]
English summary
India s first bmw motorrad ce 02 electric two wheeler delivered in kerala this cost rs 4 5 lakh
மேலும்... #bmw motorrad #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+