மக்கள் உஷார் ஆகிட்டாங்களா? ஓலா ஸ்கூட்டர் வாங்க ஆள் இல்லை!! வெளிச்சம் போட்டு காட்டும் சேல்ஸ் ரிப்போர்ட்!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் இப்போதுதான் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றாலும், எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு கணிசமான வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர். குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் பல்வேறு இவி நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அதேநேரம் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களும் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் ஈடுப்படுகின்றன. நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 88,472 எலக்ட்ரிக் 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் 62,779 எலக்ட்ரிக் 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையை ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமற்றது.

india s top-10 electric 2-wheeler brands

ஒவ்வொரு மாதத்தையும், அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பீடு செய்து பார்ப்பதுதான் சரியானதாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால், இந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 7,016 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆக, எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை உண்மையில் வழக்கத்தை காட்டிலும் சற்று குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை குறைந்திருப்பது ஆகும்.

டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ போன்ற ஏற்கனவே 2-வீலர்கள் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துவரும் நிறுவனங்கள் இருந்தாலும், தற்போதைக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால், அது ஓலா எலக்ட்ரிக் ஆகும். இது கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

india s top-10 electric 2-wheeler brands

இருப்பினும், 2024 ஜூலையில் 41,624 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 27,517 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆனது 3இல் ஒரு பங்கு குறைந்துள்ளது. 2023 ஆகஸ்ட்டில் 18,750 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் விற்பனை செய்திருந்தது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மட்டுமின்றி, மற்ற எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களின் விற்பனையும் ஜூலை உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட்டில் கணிசமாக குறைந்துள்ளது. முக்கியமாக, 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது. ஜூலையில் 19,486 டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் 17,543 டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

india s top-10 electric 2-wheeler brands

இதற்கடுத்து 3வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ உள்ளது. சேத்தக் என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்பனை செய்துவரும் பஜாஜ் ஆட்டோ கடந்த மாதத்தில் 16,706 சேத்தக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, 2024 ஜூலை மாதத்தில் 17,657 சேத்தக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. 4வது இடத்தில் ஏத்தர் எனர்ஜி 10,830 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை உடன் உள்ளது. இதற்கு முந்தைய ஜூலை உடன் ஒப்பிடுகையில் ஏத்தர் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கடுத்து 5வது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4,742 விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை உடனும், 6வது இடத்தில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி 2,816 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை உடனும் உள்ளன. இதற்கடுத்து 7வது இடத்தில் உள்ள பிகாஸ் ஆட்டோ 1,110 எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களான 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே பவுன்ஸ் எலக்ட்ரிக் (791), வார்ட்விசார்ட் (734), ரிவோல்ட் இண்டெல்லிகார்ப் (721) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, கோமகி, ஒகாயா போன்ற இவி நிறுவனங்களும் இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்கின்றன. வழக்கமாக எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை ஆனது ஏறுமுகமாக செல்வது தான் வழக்கம். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறைய இவி நிறுவனங்கள் சற்று சறுக்கலை சந்தித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2024, 22:00 [IST]
English summary
Indias top 10 electric 2 wheeler brands in 2024 august check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X