ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
யமஹா (Yamaha) நிறுவனத்தின் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல்களில் ஏரோக்ஸ் (Aerox)-ம் ஒன்றாகும். இதிலேயே நிறுவனம் புதிய வெர்ஷன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த புதிய தேர்வு ஏரோக்ஸ் எஸ் (Aerox S) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதற்கு அறிமுகமாக ரூ. 1.50 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலை வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் ரூ. 3 ஆயிரம் மட்டுமே அதிகம் ஆகும். இந்த அதிக விலைக்கு ஏற்ப வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் அதிகம் தொழில்நுட்பம் வசதியைத் தாங்கியதாகவும் அது காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், ஏரோக்ஸ் ஸ்கூட்டரின் வேற எந்த வேரியண்டிலும் வழங்கப்படாத அம்சமான ரிமோட் சாவி வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் (Honda Activa H Smart) ஸ்கூட்டருக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஸ்மார்ட் சாவி ஆப்ஷனே இதுவாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஸ்மார்ட் சாவியே இந்த வெர்ஷனுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த சாவியைக் கொண்டு தூரத்தில் இருந்தே ஸ்கூட்டரை ஆன், ஆஃப் மற்றும் லாக் போன்றவற்றை செய்ய முடியும். இதுதவிர, இன்டிகேட்டரையும் ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும். அதேபோல், ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் மற்ற எல்இடி லைட்டுகளையும் இந்த ரிமோட் வாயிலாக கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும்.
மேலும், ஹாரனை ஒலித்துக் கொள்ள முடியும். இதுமாதிரியான சூப்பரான வசதிக் கொண்ட தேர்வே ஏரோக்ஸ் எஸ் ஆகும். சில்வர் அல்லது ரேசிங் ப்ளூ இந்த நிற ஆப்ஷன்கள் மட்டுமே ஏரோக்ஸ் எஸ்-இல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே ஏரோக்ஸ் எஸ் தேர்வின் மிகப் பெரிய மாற்றம் ஆகும்.
இதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் ஏரோக்ஸ் எஸ் மாடலில் நம்மால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. உருவம் மற்றும் மற்ற பிற தொழில்நுட்ப அம்சங்களில் ஆகிய அனைத்திலும் ஏரோக்ஸ் எஸ் மற்றும் வழக்கமான வேரியண்ட் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
குறிப்பாக அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினே இந்த ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது ஓர் இ20 பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்ட எஞ்சின் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே மோட்டாரே ஏரோக்ஸ் 155லும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை ஒய் கன்னெக்ட் செயலி வாயிலாக இணைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு ஸ்கூட்டரையும் செல்போனையும் இணைக்கும்பட்சத்தில் செல்போனுக்கு வரும் பல்வேறு முக்கிய தகவல்களை ஸ்கூட்டரின் திரையிலும், ஸ்கூட்டர் பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்களை செல்போனிலும் தெரிந்துக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கியதே யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் ஆகும்.
இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 155 சிசி மோட்டாரே யமஹா ஆர் 15 மற்றும் எம்டி 15 ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய ஏரோக்ஸ் எஸ் வெர்ஷனின் வருகை ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட்டிற்கு நேரடி போட்டியாக அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட வாகனங்களுக்கு வாகன காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாகன காதலர்களைக் கவரும் பொருட்டு யமஹா நிறுவனம் அதன் ஏரோக்ஸ் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் சாவி வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








