குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் அறிவிப்பு!.. அடுத்த வாரம் புதனுக்குள்ள வாங்க முயற்சி பண்ணுங்க!

இந்தியாவில் குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு சில முன்னணி நிறுவனங்கள் ஆஃபரை அறிவிக்கவும் தொடங்கி இருக்கின்றன. அந்தவகையில், ஐவூமி (iVOOMi) எனும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two-Wheeler) உற்பத்தி நிறுவனமும் அதன் சார்பில் சில சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கின்றது.

நிறுவனம் எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சலுகையை அறிவித்து இருக்கின்றது? என்னென்ன மாதிரியான சலுகைகளை அது அறிவித்து இருக்கின்றது? இந்த சலுகை எத்தனை நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் இதுபற்றிய விபரங்களையே விரிவாக இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Ivoomi jeet x

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஐவூமி-யும் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. 20 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு பலன்களை குடியரசு தின ஸ்பெஷல் ஆஃபர் வாயிலாக அனுபவிக்க முடியும்.

இது நிறுவனத்தின் ஜீட் எக்ஸ் மாடலுக்கே பொருந்தும். இதேபோல், ரூ. 5 ஆயிரத்திற்கான சிறப்பு சலுகை எஸ்1 2.0-விற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சலுகை வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், கடந்த திங்கள்கிழமையில் இருந்தே இந்த சலுகையை ஐவூமி நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

iVOOMi republic day special offer

நிறுவனத்தின் ஜீட்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 84,999-க்கு விற்கப்படுகின்றது. இந்த மலிவு விலையிலேயே கூடுதல் பெரும் தொகையை ஐவூமி தற்போது சிறப்பு சலுகை வாயிலாகக் குறைத்திருக்கின்றது. ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி செய்திருக்கின்றது. இந்த வாகனம் ஓர் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த ஒன்றாகும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது. மிகவும் ஸ்டைலான வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. ஆகையால், ஸ்டைலும், அதிக செயல்திறன் மிக்க வாகனமாகவும் ஜூட் எக்ஸ் காட்சியளிக்கின்றது. இந்த வாகனம் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வண்ண ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதைபோலவே அதிக சிறப்புகள் தாங்கிய வாகனமாகவே ஐவூமி நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான எஸ்1 2.0 காட்சியளிக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 57 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதன் முழு சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 110 கிமீ ஆகும். இத்தகைய சிறப்பு வதிகள் கொண்ட இந்த வாகனத்தை ரூ. 82,999-க்கு ஐவூமி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த விலையிலேயே ரூ. 5 ஆயிரம் டிஸ்கவுண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுவும் ஐவூமி பிராண்டின் அதிக சிறப்புகள் தாங்கிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இதிலும் 6 விதமான வண்ண ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எஸ்1 80, எஸ்1, எஸ்1 200, எஸ்1 240 ஆகியவையே அவை ஆகும். இதில், எஸ்1 240 மாடலில் ஓர் முழு சார்ஜில் 240 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக இந்த வாகனத்தில் 4.2kW லித்தியன் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5மணி நேரங்கள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் பொருட்டு இந்த ஐவூமி நிறுவனம் சிறப்பு சலுகைகளை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவித்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 24, 2024, 14:50 [IST]
English summary
Ivoomi announced spl offers for republic day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+