10,000 ரூபாவ மிச்சப்படுத்த முடியும்! சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபர் அறிவித்த இ-ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம்
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வேகமாக வளர்ந்து மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக கருதப்படும் ஐவூமி (iVOOMi), சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியையே நிறுவனம் அதன் குறிப்பிட்ட தயாரிப்பு ஒன்றிற்கு அறிவித்து இருக்கின்றது. இந்த சிறப்பு சலுகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டுமல்ல, வரவிருக்கும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டும் அது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி என்பது ஜீட் எக்ஸ் இசட்இ (Jeet X ZE) மற்றும் எஸ்1 லைட் ஆகிய மாடல்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
விலை தள்ளுபடியுடன் சேர்த்து இலவசமாக அக்சஸரீஸ்களையும் வழங்க இருப்பதாக ஐவூமி நிறுவனம் அறிவித்து உள்ளது. நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் அனைத்திற்கும் இது பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து இந்த சலுகையானது 11 ஆகஸ்டு தொடங்கி 20 ஆகஸ்டு வரை மட்டுமே கிடைக்கும்.

தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், சத்திஷ்கர் மற்றும் ஓடிசா என நிறுவனம் வர்த்தகம் மேற்கொண்டு வரும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சலுகைப் பொருந்தும். பெட்ரோலிடம் இருந்து சுதந்திரம் எனும் திட்டத்தின்கீழே இந்த சலுகையை ஐவூமி அறிவித்து இருக்கின்றது.
நிறுவனத்தின்கீழ், இன்றைய நிலவரப்படி ஜீட் எக்ஸ் இசட்இ (JeetX ZE), ஜீட் எக்ஸ் (Jeet X), எஸ்1 லைட் (S1 Lite) மற்றும் (S1) ஆகிய மாடல்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் சமீபத்திய அறிமுகமாக ஜீட் எக்ஸ் இசட்இ மாடல் இருக்கின்றது.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இப்போது விலை தள்ளுபடியால் 89,999-க்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. இதேபோல், முன்னதாக 64,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட எஸ்1 லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியால், இதன் விலை ரூ. 54,999க்கே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.
இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். லேட்டஸ்ட் அறிமுகமான ஜீட் எக்ஸ் இசட்இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஓர் முழு சார்ஜில் சுமார் 170 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 3 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான திறனை வெளியேற்றும். இதேபோல், ரைடிங் மோட்-க்கு ஏற்ப ரேஞ்ஜ் தரும் திறனும் இந்த ஸ்கூட்டரில் மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஈகோ, ரைடர் மற்றும் ஸ்பீடு ஆகிய மோட்களே இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஈகோ மோடில் 170 கிமீ ரேஞ்ஜையும், ரைடர் மோடில் 140 கிமீ ரேஞ்ஜையும் ஜூட் எக்ஸ் இசட்இ தரும்.
அதேநேரத்தில் இருப்பதிலேயே மிக மிக குறைவான ரேஞ்ஜாக ஸ்பீடு மோட்-இல் 130 கிமீட்டரை மட்டுமே அது தரும். ரேஞ்ஜ் தருவதைப் போலவே சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறந்த மாடலாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், செல்போன் இணைக்கும் வசதி, ஸ்மார்ட் ஸ்பீடோமீட்டர், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை ஐவூமி இதில் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கூட்டர் திரையிலேயே பார்த்துக் கொள்ளவும் முடியும். இதற்கான வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பயண தரவுகள், SOC விழிப்பூட்டல்கள் போன்ற வசதிகளையும் இந்த ஸ்கூட்டரில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும்.
இந்த வேகத்தை கட்டுப்படுத்த ஏதுவாக சிறப்பான பிரேக்கிங் சிஸ்டத்தை ஐவூமி நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆகையால் விரைவான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை இதில் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து, சிறந்த பயண அனுபவத்திற்கு 75 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ஓலாவின் விலை குறைவான தயாரிப்பான எஸ்1 எக்ஸ் மாடலுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு கூடுதல் டஃப் கொடுக்கும் விதமாக தற்போது சுந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபர் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே விற்பனையில் ஜீட் எக்ஸ் இசட்இ மாடல் வரும் நாட்களில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








