ஓலா-டிவிஎஸ் கொஞ்சம் ஓரமா போங்க.. ரூ.79,999க்கு புதிய இ-ஸ்கூட்டர் அறிமுகம்.. 170 கிமீ பயமே இல்லாம போகலாம்!
இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் ஏத்தர் எனெர்ஜி (Electric Scooter) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் நல்ல வரவேற்பு இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிறுவனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தன் வசம் திருப்பிவிடும் நோக்கில் இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருக்கின்றன. அந்த வகையிலேயே பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஐவூமி (iVOOMi)-யும் ஓர் செயலை செய்து இருக்கின்றது.

து ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜீட் எக்ஸ் இசட்இ (JeetX ZE) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது அறிமுகம் செய்துள்ளு. இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது ஆகும்.
இதற்கு அறிமுகமாக ரூ. 79 ஆயிரத்து 999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது மொத்தமாக மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 2.1 kWh, 2.5 kWh மற்றும் 3 kWh இவையே அந்த பேட்டரி பேக் தேர்வுகள் ஆகும்.
வெறும் 18 மாதங்களிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்து, தற்போது உற்பத்தி செய்து விற்பனைக்கும் கொண்டு வந்துவிட்டது. இதற்கு முன்னதாக ஒரு லட்சம் கிமீட்டர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ முதல் 170 கிமீ வரையில் இது ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
முன்னதாக விற்பனையில் இருந்ததைக் காட்டிலும் மிகவும் இலகுவானதாக இந்த மாடல் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இதன் கூலிங் சிஸ்டமும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. 2.4 மடங்கு அதிக வேகத்தில் இது வாகனத்தை கூல் செய்யும். எனவே தடையில்லா பயணத்தை புதிய ஜீட் எக்ஸ் இசட்இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
இத்துடன், இந்த தயாரிப்பின்மீது இருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக சேஸிஸ், பேட்டரி பேக் மற்றும் பெயிண்ட் உள்ளிட்டவற்றிற்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டியை ஐவூமி அறிவித்து இருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரி பேக் ஐபி67 தர சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
நார்டோ கிரே, இம்பீரியல் ரெட், அர்பன் கிரீன், பியர்ல் ரோஸ், பிரீமியம் கோல்டு, செருலியன் ப்ளூ, மார்னிங் சில்வர் மற்றும் ஷேடோவ் பிரவுன் ஆகிய நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். இத்துடன், ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை அறிந்துக் கொள்ளும் வசதி, ஜியோ ஃபென்சிங் போன்ற தொழில்நுட்ப வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஐவூமி தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட ஜீட் எக்ஸ் இசட்இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அழகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








