ஒரு லட்ச ரூபாக்கே வெஸ்பாவையே தோற்கடிக்கும் அழகில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? 3 kWh பேட்டரி பேக் வேற கொடுத்திருக்கா

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஐவூமி (iVOOMi)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஜீட் எக்ஸ் இசட்இ இருக்கின்றது. இந்த மாடலிலேயே நிறுவனம் தற்போது வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஜீட் எக்ஸ் இசட்இ (Jeet X ZE) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிய 3 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் கொண்ட வேரியண்டையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சுமார் 170 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

Jeet x ze electric scooter

அந்தவகையில், தமிழ்நாடு, குஜராத்,மஹாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலேயே ஐவூமி ஜீட் எக்ஸ் இசட்இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இது அழகில் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது. பழங்கால மற்றும் நவீன யுக டிசைன் அமைப்பை அது கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் ஜீட் எக்ஸ் இசட்இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வெற்றிகரமான வரவேற்பை தொடர செய்யும் வகையிலேயே புதிய தேர்வாக 3kWh பேட்டரி பேக் அதில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், மேம்பட்ட ஆயுள் மற்றும் நிலைத்தன்மையை வழங்குவதற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 42 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட இஆர்டபிள்யூ1 (ERW1) ஸ்டீல் ட்யூப் மூலம் தயாரிக்கப்பட்ட அண்டர்போன் ஃப்ரேமே ஜீட் எக்ஸ் இசட்இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் குறைவான விலையிலேயே இது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதுதவிர, மொபைல் செயலி இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் ஸ்பீடோமீட்டர், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு வசதி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கூட்டர் திரையிலேயே அறிந்துக் கொள்ளும் வசதி, பயண தரவுகள், SOC விழிப்பூட்டல்கள் போன்ற ஏகப்பட்ட வசதிகளை இந்த ஸ்கூட்டர் தன்னுள் தாங்கி இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும். இத்துடன் மிக சிறப்பான பிரேக்கிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால் விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை இதில் உறுதி. மேலும், மென்மையான மற்றும் வசதியான பயணத்திற்கு ஏதுவாக 75 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.

இவற்றுடனயேயே மூன்று விதமான ரைடிங் மோட் ஆப்ஷன்களும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஈகோ, ரைடர் மற்றும் ஸ்பீடு ஆகிய மோட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஈகோ மோடில் 170 கிமீ ரேஞ்ஜையும், ரைடர் மோடில் 140 கிமீ ரேஞ்ஜையும் மற்றும் ஸ்பீடு மோடில் 130 கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ஓலாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கே மிக முக்கியமான போட்டியாளனாக அமைந்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு இதன் வருகை சவாலான சூழலை உருவாக்கி இருக்கின்றது. மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஜீட் எக்ஸ் இசட்இ மேம்பட்ட அம்சங்கள், சவால்விடும் விலை மற்றும் அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கும் திறன் ஆகியவற்றுடன் இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 18:27 [IST]
English summary
Ivoomi unveils new jeet x ze scooter variant with enhanced range
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+