ஓலாகூட இவ்ளோ கம்மி விலைக்கு விற்கல! ரூ. 54,999க்கே இவ்ளோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! தலைசுத்த வச்சுட்டாங்க

ஐவூமி (iVOOMi) நிறுவனம் இந்தியாவில் அதன் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்Hனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எஸ்1 லைட் (S1 Lite) மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 54,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏழை மற்றும் எளிய மக்களுக்கும் தன்னுடைய தயாரிப்புகள் எட்டும் கனியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஐவூமி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

விலை குறைவானதாக இருந்தாலும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் எந்தவொரு குறைச்சலும் இல்லாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஈர்க்கும் பொருட்டு ஐவூமி நிறுவனம், எஸ்1 லைட் மாடலுக்கு 3 ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அட்வான்ஸ்டு அம்சம் கொண்ட பேட்டரி பேக்கையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐவூமி வழங்கி இருக்கின்றது.

ivoomi launches s1 lite

ரிமூவபிள் பேட்டரி (தனியாக கழட்டி மாட்டும்) பேக்கே இதில் வழங்கப்பட இருக்கின்றது. இது அதிக பாதுகாப்பான பேட்டரி பேக் என கூறப்படுகின்றது. 7 அடுக்கு பாதுகாப்பு திறன் கொண்டதே இந்த பேட்டரி பேக் என கூறப்படுகின்றது. இதனை ஒட்டுமொத்த மூன்று விதமான ஆறு விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

பியர்ல் ஒயிட் (pearl white), மூன் கிரே (moon grey), ஸ்காலட் ரெட் (scarlet red), மிட்நைட் ப்ளூ (midnight blue), ட்ரூ ரெட் (true red) மற்றும் பீகாக் ப்ளூ (peacock blue) ஆகியவையே அவை ஆகும். நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தவகையில், தமிழ்நாடு, குஜராஜ், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ராஜஸ்ஜான் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலேயே தற்போது முதல் கட்டமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. எஸ்1 லைட் இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கிராபீன் அயன் (Graphene ion) மற்றும் லித்தியம் அயன் (Lithium Ion) ஆகியவையே அவை ஆகும்.

முதல் ஒன்று ரூ. 54,999-க்கும், மற்றொன்று ரூ. 64,999க்கும் விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இவை ஓர் முழு சார்ஜில் 75 கிமீ முதல் 85 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும். ஐவூமி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சுலப மாத தவணை திட்டத்தின்கீழ் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ரூ. 1,499 முதலே மாத தவணை திட்டம் வழங்கப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளை ஐவூமி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அறிமுகத்தை முன்னிட்டு இன்று முதலே அந்த பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் இதன் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இஆர்டபிள்யூ 1 (ERW 1) கிரேடு சேஸிஸ்ஸைக் கொண்டே ஐவூமி கட்டமைத்திருக்கின்றது.

இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ ஆகும். மேலும், 18 லிட்டர் பூட் ஸ்பேஸ், 12 இன்ச் மற்றும் 10 இன்ச் என்கிற இரண்டு விதமான அளவுகளிலான வீல் ஆப்ஷன் ஆகியவையும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன. இத்துடன், மொபைல் சார்ஜிங்கிற்கான யுஎஸ்பி போர்ட் (5V, 1A) மற்றும் எல்இடி ஸ்பீடோமீட்டர் திரை போன்ற அத்தியாவசிய அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேடும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ஐவூமி எஸ்1 லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வருகை ஓலா மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு தலை வலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2024, 18:15 [IST]
English summary
Ivoomi unveils s1 lite indias budget friendly electric scooter
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+