இருக்குற பணத்தை எல்லாம் காலி பண்ணி டூவீலர்களை வாங்கி குவித்த மக்கள்! ஜனவரி மாதம் நடந்த செம சேல்ஸ்!
இந்தியாவில் டூவீலர்களை தயாரித்து விற்பனை செய்யும் 6 முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஜனவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ், சுஸூகி ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் எவ்வாறு பெர்ஃபார்ம் செய்தது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
கடந்த ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக டூவீலர் விற்பனை என்பது மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது. இந்த 6 நிறுவனங்களும் மொத்தமாக சேர்ந்து 14,16,096 என்ற எண்ணிக்கையில் டூவீலர் கடை விற்பனை செய்துள்ளது. இதுவே இதே ஆர்வம் நிறுவனங்கள் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11,20,330 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 2,95,776 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 26.40% வளர்ச்சியாகும்.

இதில் ஒவ்வொரு நிறுவனமாக பார்க்க வேண்டும் என்றால் முதல் இடத்தில் ஹீரோ நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தமாக 4,20,934 வாகனங்களை கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,49,237 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
தற்போது கூடுதலாக 71,497 வாகனங்கள் விற்பனையாகி 20.46% வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3,77,842 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது அதை ஒப்பிடும்போது கூடுதலாக 43,092 வாகனங்கள் அதிகம் விற்பனையாகி 11.40% வளர்ச்சியை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக 3,82,512 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,78,143 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது.தற்போது கூடுதலாக 1,04,369 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
இது 37.52% வளர்ச்சியாகவும் இதுவே கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 2,86,101 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும்போது கடந்த ஜனவரி மாதம் 96,411 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது இது 33.70% வளர்ச்சியாகவும். இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முத்தமாக 2,68,233 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,16,471 வாகனங்களை இதுதான் விற்பனை செய்திருந்தது.தற்போது கூடுதலாக 51,762 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது மொத்தமாக 23.91 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,14,998 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 53,245 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது மொத்தமாக 24.77% வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.

பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது பஜாஜ் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 1,93,350 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,42,368 வாகனங்களை விற்பனை செய்திருந்தது இந்த ஆண்டு கூடுதலாக 51,982 வாகனங்கள் விற்பனை செய்து 35.81% வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதுவே கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 1,58,370 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி இருந்தது. அதை விட தற்போது கூடுதலாக 34,980 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 22.0 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இது நல்ல வளர்ச்சியாகும்.

பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது சுஸூகி நிறுவனம் ஆகும் இந்நிறுவனம் மொத்தம் 80,511 வாகனங்களை தனது ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 66,209 வாகனங்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது கூடுதலாக 14,32 வாகனங்கள் விற்பனையாகி 21.60 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதுவே கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 69,025 வாகனங்கள் விற்பனையாக இருந்தது தான். அதை ஒப்பிடும்போது தற்போது கூடுதலாக 11,486 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 16.64 சதவீத வளர்ச்சியாகும். இந்த 5 நிறுவனங்களும் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
பட்டியலில் 6 வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 70,556 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. இதுவே கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் 67,702 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது சிறப்பான விற்பனையாகும்.
அதை ஒப்பிடும்போது கூடுதலாக 2854 வாகனங்கள் விற்பனையாகி 4.22% வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 57,291 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது கூடுதலாக 13,265 வாகனங்கள் விற்பனை அதிகரித்து 23.15 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மிக அதிக எண்ணிக்கையிலான டூவீலர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவு சிறப்பான வளர்ச்சியை இந்த டூவீலர் செக்மென்ட்கள் பெற்றுள்ளன. இது இந்தியாவில் பெருகிவரும் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஒரு ஆதாரமாக தெரிகிறது. இந்தியாவில் விரைவில் டூ வீலர் விற்பனை என்பது மிக உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









