அலாய் வீல்களுடன் அப்டேட்டான ஜாவா 350 பைக்குகள்! விலை இவ்வளவு கம்மியா?
ஜாவா யெஸ்டி நிறுவனம் இந்தியாவில் சிறந்த பைக்குகளை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் 350 லைன்-அப் பைக்குகள் இந்தியாவில் பிரபலமாகி வரும் நிலையில் இந்த 350 பைக்குகளை விரிவுபடுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த பைக்கை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பைக்குகளின் ரூ1.99 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. புதிய பைக்குகளில் புதிய அலாய் வீல் வேரியண்ட்கள் மற்றும் நான்கு புதிய கலர்வே கொண்ட ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜாவா-யெஸ்டி நிறுவனம் தனது 350 லைன்-அப் பைக்குகளை அப்டேட் செய்யும் விதமாக பேஸ் வேரியண்ட் பைக்கை ரூ 1,98,950 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்போர்க் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் புதிதாக மூன்று கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஒபிசிடியன் பிளாக் மற்றும் டீப் ஃபாரெஸ்ட் ஆகிய கலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த பைக்கின் அலாய் வீல் வேரியண்டும் அறிமுகமாகியுள்ளது. இந்த அளவில் வேரியன்ட் ரூ 2,08,950 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஜாவா 350 குரோம் வேரியண்டை பொறுத்தவரை ஸ்போக் வீல்களுடன் ரூ 2,14,950 என்ற விலையில் அறிமுகமாகி உள்ளது. இதில் நான்கு விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன.
அதன்படி இந்த பைக்கில் மெரூன், பிளாக், மிஸ்டேக், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. இதில் வெள்ளை நிறம் புதிதாக சேர்க்கப்பட்ட நிறமாக இருக்கிறது. ஸ்பெக் மற்றும் குரோம் வேரியண்டில் அலாய் வீல் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அலாய் வீல்களுடன் இந்த பைக் 2,23,950 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 334 சிசி லீக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 22.2 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜினில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதே இன்ஜின் தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் 35 மிமீ டெஸ்லஸ்கோபிக் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கடினமான சாலைகளிலும் இந்த பைக்கால் சுலபமாக பயணம் செய்ய முடியும். மேலும் இதில் 178 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. 802 மிமீ உயரத்தில் சீட் அமைக்கப்பட்டுள்ளது.

நியோ-ரெட்ரோ பைக்கை பொறுத்தவரை 18 இன்ச் வீல் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின் பக்கம் 17 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டயர்களை பொருத்தவரை 100/90-18 என்ற அளவில் முன் பக்கமும் 130/80-17 என்ற அளவில் பின்பக்கமும் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எம்ஆர்எஃப் நிறுவனத்தின் ஸேப்பர் டயர்களாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பிரேக்குகளை பொருத்தவரை, பைபிரி டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முன் பக்கம் 220 மிமீ அளவு கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 240 மிமீ அளவு கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கின் பிரேக்கிங் சிஸ்டமும் சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜாவா நிறுவனம் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக அதன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள் தற்போது அலாய் வீல் ஆப்ஷன் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வை ஜாவா நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் இந்த பைக்கின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா நிறுவனத்தின் பைக்குகள் தனித்துவமான எண்ணங்கள் கொண்ட வாடிக்கையாளர்களை இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயர் இருக்கிறது. அந்த பெயரை காப்பாற்றும் வகையில் இந்நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்ட நிலையில் அதில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அப்டேட்டை வழங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









