ராயல் என்ஃபீல்டு ஆதிக்கத்தை உடைக்கனும்னா இந்த ஜாவா பைக்கால் மட்டும்தான் முடியும்! ஆனால் பைக்கின் விலை இவ்வளவா?

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) அதன் புதிய ஜாவா 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜாவா 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை என்ன என்பதையும், இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகளுக்கு போட்டியாக ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதியதொரு 350சிசி பைக்கை அறிமுகம் செய்யவுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், எதிர்பார்த்ததை போல் ஜாவா 350 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஜாவா பைக் பிரபலமான, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக இருக்கும்.

jawa 350 launched in india

ஏற்கனவே விற்பனையில் உள்ள ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜாவா 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.15 லட்சமாக நிர்ணயிக்கபட்டுள்ளது. இது, ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கை விட வெறும் ரூ.12,000 மட்டுமே அதிகமாகும். ஜாவா ஸ்டாண்டர்ட் மற்றும் ஜாவா 350 இவை இரண்டிற்கும் இடையேயான மிக பெரிய & முக்கியமான வித்தியாசம் என்ஜின் ஆகும்.

ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கில் 294.72சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதுவே, புதிய ஜாவா 350 பைக்கில் 334சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 22 பிஎச்பி மற்றும் 28.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

jawa 350 launched in india

அத்துடன், என்ஜின் சிஸ்டத்தில் ஸ்லிப்பர் க்ளட்ச்சும் உள்ளது. என்ஜினுக்கு அடுத்து, இந்த இரு பைக்குகளின் அளவும் வேறுபடுகிறது. குறிப்பாக, ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கை காட்டிலும் ஜாவா 350 பைக் நீளம் அதிகமாக்கப்பட்டு உள்ளது. புதிய ஜாவா 350 பைக்கின் நீளம் 790மிமீ ஆகும். இதன் காரணமாக, பைக்கின் கிரவுண்ட் கிளியரென்ஸ் நீளமும் 178மிமீ ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதிய ஜாவா 350 பைக்கின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் சற்று அதிகமாக 1,449மிமீ ஆக உள்ளது. பைக்கின் எடை 194 கிலோ ஆகும். அதுவே, பழைய ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கின் எடை 182 கிலோ ஆகும். புதிய ட்யூயல்-க்ராடல் சேசிஸில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜாவா 350 பைக்கில் நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

jawa 350 launched in india

இருப்பினும், ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கில் வழங்கப்படும் அதே அளவிலான சக்கரங்களே இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளன. என்ஜின் மற்றும் அளவுகளுக்கு அடுத்து, தோற்றத்தில் ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கில் இருந்து ஜாவா 350 சற்று வேறுபடுகிறது. குறிப்பாக, புதிய ஜாவா 350 பைக்கில் டயர்கள் வித்தியாசமான பேட்டர்னில் பொருத்தப்பட்டுள்ளன.

இருக்கைகள் ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கில் வழங்கப்படுவதை காட்டிலும் இந்த புதிய பைக்கில் தடிமனானதாக உள்ளது. ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கின் மெரூன் மற்றும் கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன்களில் ஜாவா 350 பைக்கை வாங்கலாம். அதேநேரம், மிஸ்டிக் ஆரஞ்ச் என்ற புதியதொரு நிறத்திலும் ஜாவா 350 பைக்கை வாங்கலாம்.

jawa 350 launched in india

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா 350 பைக் முக்கியமாக ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகளை டார்க்கெட் செய்துதான் கொண்டுவரப்பட்டு உள்ளது என்றாலும், அதேநேரம் மற்ற 350சிசி பைக்குகளுக்கும் விற்பனையில் சரியான போட்டியாக இருக்கும் என்பது உறுதி. இருப்பினும், ரூ.2.15 இலட்சம் என்பது சற்று அதிகமானதாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 15, 2024, 16:43 [IST]
English summary
Jawa 350 motorcycle launched in india at rupees 2 14 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X