ராயல் என்ஃபீல்டை முந்த ஜாவா கையில் எடுத்துள்ள ஆயுதம்... விலையை பார்த்ததும் தெறிச்சிட்டு ஓட போறாங்க!!

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles), இந்தியாவில் பல வருடங்களுக்கு முன்பு இருந்தே மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துவரும் பைக் நிறுவனம் ஆகும். 1960, 70ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த ஜாவா நிறுவனம் பெரிய இடைவெளிக்கு பின் சில வருடங்களுக்கு முன்பு அதன் பைக்குகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. இந்த நிலையில், சமீபத்தில் ஜாவா 42 எஃப்.ஜே என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே விற்பனையில் உள்ள ஜாவா 42 பைக்கிற்கும், புதிய ஜாவா 42 எஃப்ஜே பைக்கிற்கும் இடையே என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன என்பதை இனி பார்க்கலாம்.

டிசைன்: சற்று தூரத்தில் இருந்து பார்த்தால், ஜாவா 42 மற்றும் 42 எஃப்ஜே பைக்குகளுக்கு இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லாதது போல் தெரியலாம். சற்று உற்று கவனித்தால், புதிய 42 எஃப்ஜே பைக்கில் எக்ஸாஸ்ட் குழாய் மேல்நோக்கி வளைக்கப்பட்டு உள்ளதை காணலாம். அதேபோல், எஃப்ஜே பைக்கில் ஹெட்லைட்டின் வடிவம் சற்று வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

jawa 42 bikes comparison

என்ஜின்: ஜாவா 42 மற்றும் 42 எஃப்ஜே பைக்குகளுக்கு இடையேயான முக்கியமான வித்தியாசம் என்ஜினில் தான் உள்ளது. ஏனெனில், புதிய 42 எஃப்ஜே பைக்கில் புதிய 'ஆல்ஃபா 2' 334சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதுவே, ஜாவா 42 பைக்கில் அளவில் சிறியதான 294.72சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஆல்ஃபா 2 என அழைக்கப்படும் புதிய 42 எஃப்ஜே பைக்கின் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 29 பிஎச்பி மற்றும் 29.6 என்.எம் டார்க் திறனையும், 'ஜே பாந்தர்' என அழைக்கப்படும் ஜாவா 42 பைக்கின் 294.72சிசி என்ஜின் ஆனது 26.9 பிஎச்பி மற்றும் 26.84 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த இரு பைக்குகளிலும் என்ஜின் சிஸ்டத்தில் ஸ்லிப் & அசிஸ்ட் ஃபங்க்‌ஷன் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

பரிமாண அளவுகள் & எடை: நீளம், அகலம், உயரம் உள்ளிட்டவற்றில் ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கும், ஜாவா 42 பைக்கிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாமும் இல்லை. புதிய எஃப்.ஜே பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 790மிமீ-லும், ஜாவா 42 பைக்கில் 788மிமீ உயரத்திலும் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் ஜாவா 42 பைக்கில் 13.2 லிட்டர்கள் கொள்ளளவிலும், 42 எஃப்ஜே பைக்கில் வெறும் 12 லிட்டர்கள் கொள்ளளவிலும் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.

jawa 42 bikes comparison

இருப்பினும், ஜாவா 42 பைக்கை விட ஜாவா 42 எஃப்ஜே பைக் ஆனது 2 கிலோ எடைமிக்கது ஆகும். 42 எஃப்.ஜே பைக்கின் எடை 184 கிலோ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது ஜாவா 42 பைக்கில் 1,369மிமீ ஆகவும், புதிய எஃப்ஜே பைக்கில் 1,440மிமீ ஆகவும் உள்ளது. புதிய ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் முன் சக்கரம் 18 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன்: சஸ்பென்ஷனுக்கு ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் முன்பக்கத்தில் 41மிமீ-லும், ஜாவா 42 பைக்கில் சற்று சிறியதாக 35மிமீ-லும் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன. பின்பக்க சஸ்பென்ஷனுக்கு இரு பைக்குகளிலும் ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட் உடன் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், புதிய எஃப்ஜே பைக்கில் ப்ரீலோடிங்கை 5 விதமாக அட்ஜெஸ் செய்துக் கொள்ளலாம்.

விலை: ஜாவா 42 பைக்குகளிலேயே விலையுயர்ந்த பைக்காக 42 எஃப்ஜே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 42 எஃப்ஜே பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.99 லட்சத்தில் இருந்து ரூ.2.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் மறுப்பக்கம், ஜாவா 42 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.73 லட்சத்தில் இருந்து ரூ.1.98 லட்சம் வரையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா 42 பைக்கை வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு ஜாவா 42 பைக்கை வாங்குவதா அல்லது புதிய 42 எஃப்ஜே பைக்கை வாங்குவதா என்கிற குழப்பம் இருக்கலாம். எங்களை கேட்டால், புதிய எஃப்ஜே நல்ல சாய்ஸாகும். ஏனெனில், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியாக நிறைய விஷயங்கள் ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், கிளாசிக் தோற்றத்தில் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு ஸ்டாண்டர்ட் ஜாவா 42 ஆனது ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 12:00 [IST]
English summary
Jawa 42 bikes comparison check all details here
மேலும்... #jawa motorcycles #jawa #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+