வாங்கினா இப்படி ஒரு கலருலதான் பைக் வாங்கணும்! தனி ஆளா கெத்தா பயணிக்கலாம்.. ஜாவா 42 பாபர் ரெட் ஷீன் அறிமுகம்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்திற்கு போட்டியாக இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிரபல ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனம், இந்தியாவில் புதிய பைக் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. 42 பாபர் ரெட் ஷீன் (42 Bobber Red Sheen) எனும் பைக் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.

இதற்கு அறிமுகமாக ரூ. 2.29 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மும்பையில் நடந்த ஆல் யூ கேன் ஸ்ட்ரீட் ஃபெஸ்டிவலின் (All You Can Street Festival) போதே, ​​ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இந்த பைக்கை அறிமுகப்படுத்தியது. ஃபேஷன், இசை மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை அடக்கிய ஓர் திருவிழாவே இதுவாகும்.

42 bobber red sheen

இந்த திருவிழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாகவே ஜாவா 42 பாபர் ரெட் ஷீன் பைக் இங்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. தங்களின் நேர்த்தியான வடிவமைப்பு கலையை பிரதிபலிக்கும் விதமாக இந்த பைக்கை ஜாவா தயார் செய்திருக்கின்றது. ஏற்கனவே ஜாவா நிறுவனம் பிளாக் மிர்ரர் எடிசன் எனும் பதிப்பை இந்த பைக் மாடலில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனுடனேயே புதிய பதிப்பு விற்பனைக்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. 334 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 29.9 பிஎஸ் பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Jawa 42 bobber red sheen

இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் ஆகிய அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பைக்கில் ரைடு அனுபவத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 7 ஸ்டெப் ப்ரீ-லோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், இதன் இருக்கையையும் மூன்று வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இத்துடன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் கன்சோல், எல்இடி லைட் உள்ளிட்ட அம்சங்களும் புதிய சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஜாவா 42 பாபர் ரெட் ஷீன் தோற்றத்தில் வழக்கமான ஜாவா 42 பாபரைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளது.

Jawa 42 bobber red sheen side view

இதற்காக வித்தியாசமான நிற அலங்கரிப்பு வேலை இந்த பைக்கில் பார்க்கப்பட்டு இருக்கின்றது. சிவப்பு நிறம் பைக்கின் ஃப்யூவல் டேங்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், குரோம் ஃபினிஷ்-ம் இந்த பைக்கின் ஃப்யூவல் டேங்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக்கை அலங்கரிக்கும் விதமாக டைமண்ட் கட் அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதைத்தாண்டி வேறு எந்த மாற்றமும் இந்த பைக் மாடலில் செய்யப்படவில்லை. அதே ஒருவர் மட்டுமே பயணிக்கும் இருக்கை அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லைட், ஹேண்டில் பாரில் பொருத்தப்பட்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி ஆகியவை ஜாவா 42 பாபர் ரெட் ஷீன் எடிசனில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ரெட் ஷீன் உடன் சேர்த்து மூன்ஸ்டோன் ஒயிட் (Moonstone White), மிஸ்டிக் காப்பர் ஸ்போக் வீல் (Mystic Copper Spoke Wheel), மிஸ்டிக் காப்பர் அலாய் வீல் (Mystic Copper Alloy Wheel), ஜாஸ்பர் ரெட் டூயல் டோன் ஸ்போக் வீல் (Jasper Red Dual Tone Spoke Wheel), ஜாஸ்பர் ரெட் டூயல் டோன் அலாய் (Jasper Red Dual Tone Alloy Wheel) மற்றும் பிளாக் மிர்ரர் (Black Mirror) ஆகிய தேர்வுகளிலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது 42 பாபர் மாடலில் புதிய ரெட் ஷீன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2024, 19:08 [IST]
English summary
Jawa 42 bobber red sheen launch india at inr 2 29 lakh
மேலும்... #jawa motorcycles #india #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X