இவ்வளவு குறைந்த விலையில் இப்படி ஒரு பைக்கா? ஜாவா 42 எஃப் ஜே பைக் அறிமுகமானது!
300 முதல் 500 சிசி கொண்ட பைக்குகள் என்றால் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் அதற்கு போட்டியாக ஜாவா நிறுவனம் 42 என்ற பைக்கை தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த ஜாவா 42 பைக்கின் ஸ்போர்டியர் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 1.99 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவை சமீபகாலமாக 300 முதல் 500 சிசி செக்மெண்டில் உள்ள பைக்குகளில் விற்பனை அதிகமாகி வருகிறது. இது செக்மெண்டில் ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் நிலையில், இதற்கு போட்டியாக மற்ற நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் கிளாசிக் ரக பைக்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக் போட்டியாக ஜாவா நிறுவனத்தின் 42 பைக் இந்தியாவில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இந்த பைக்கின் போட்டியில் வெர்ஷனாக புதிய அப்டேட் செய்யப்பட்ட பைக்கை இன்று ஜாவா நிறுவனம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஜாவா 42 எப்ஜே பைக் மாடல் ரெட்ரோ தீம்-ல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் நீர்த்துளி வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. என் பக்கவாட்டில் அலுமினிய பிளேட் கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சைடு பேனல்கள் எல்லாம் தற்போது விற்பனையாகி வரும். ஜாவா 42எஸ் பைக்கில் உள்ள அதே வடிவமைப்பு தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோக இந்த பைக்கில் மல்டிஸ்போக் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஜின் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஸ்போர்ட்டியான லுக்கில் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. பேஸ் மாடல் பைக்கில் வயர் ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் மொத்தம் ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்கு சிறப்பாக இந்த பைக் இருக்கிறது.
இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பொருத்தவரை எல்இடி லைட்டுகள், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இது எல்லாம் மக்கள் அதிக நாள் எதிர்பாத்த அம்சமாக இருக்கிறது. முக்கியமாக இந்த பைக்கில் இன்ஜின் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முற்றிலுமாக புதிய இன்ஜின் இதில் வழங்கப்பட்டுள்ளது.

ஜாவா 42 எப்ஜே பைக்கில் 334 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 21.45 பிஎச்பி பவரையும் 29.62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிக்ஸ் ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்களும் உள்ளன.
இந்த பைக் கொண்டு ஸ்டீல் சேஸிஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்பக்கம் 41மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் ட்வின் ஷஆக் அப்ஷர்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை 2 வீல்களிலும் 320மிமீ அளவுகளில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பிரேக் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்ட்களிலும் இந்த ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூபாய் 1.9 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. இந்த நிலையில் ஆரா கிரீன் மேட் ஃபோர்க் கலர் கொண்ட பைக் அறிமுகமாகிறது. அடுத்ததாக ஆரா கிரீன் மேட்டில் அலாய் வீல் பொருத்தப்பட்ட பைக் ரூபாய் 2.10 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
மிஸ்டிக்யூ காப்பர் மற்றும் காஸ்மோக் ப்ளூ மேட் கலர் கொண்ட பைக் ரூபாய் 2.15 லட்சம் என்ற விலையிலும், டீப் பிளாக் மேட் ரெட் கிளாட் மற்றும் டீப் ப்ளூ மேட் பிளாக் கிளாட் கலர் பைக் ரூ 2.20 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த ஜாவா 42 ஸ்போர்ட்டியர் வெர்ஷன் பைக் அறிமுகமாகியுள்ளது. மார்க்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் கிளாசிக் 350, புல்லட் 350, ஹோண்டா சிபி350, ஹீரோ மேவரிக் 440 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









