ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டி வெறுத்து போச்சா? மார்க்கெட்டில் அதே ஸ்டைலில் கிடைக்கும் பைக்குகள்!!

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனம் அதன் புதிய ஜாவா 42 எஃப்.ஜே மோட்டார்சைக்கிளை சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா 42 பைக்கின் புதிய ஸ்போர்டியர் வெர்சனாக 42 எஃப்.ஜே அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கேற்ப சிறிய அளவிலான ஃபெண்டர்கள் உள்பட சில மாற்றங்கள் ஜாவா 42 பைக்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஜாவா 42 பைக்கை விட புதிய 42 எஃப்.ஜே ஆனது அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

புதிய ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கு விற்பனையில் நேரெதிர் போட்டியாக ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் 350 விளங்குகிறது. ஆனால், ஹண்டர் 350 பைக்கை காட்டிலும் 42 எஃப்.ஜே பைக்கின் விலை ஏறக்குறைய ரூ.50,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாவா 42 எஃப்.ஜே மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

42 fj vs hunter 350

பரிமாண அளவுகள்: புதிய ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கும் ஜாவா 42 பைக்கிற்கும் இடையே தோற்றத்தில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருப்பினும் அதேநேரம், தனித்து தெரியும் வகையில் எஃப்.ஜே பைக்கின் தோற்றத்தில் சில மாடிஃபிகேஷன்களை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் கொண்டுவந்துள்ளது. நீர்த்துளி வடிவில் பெட்ரோல் டேங்க், வட்ட வடிவில் ஹெட்லைட், தட்டையான இருக்கை மற்றும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட ட்யூயல் எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவை ஜாவா 42 எஃப்.ஜே பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கும் வட்ட வடிவில் ஹெட்லைட், மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், தட்டையான இருக்கை போன்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உண்டான தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஜாவா 42 பைக்கை காட்டிலும் ஹண்டர் 350 தாழ்வானது. இருப்பினும், தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரம் இரண்டிலும் ஒரே அளவில் உள்ளன. அதேபோல், பெட்ரோல் டேங்க் கொள்ளளவிலும் இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.

42 fj vs hunter 350

தொழிற்நுட்ப வசதிகள்: ஜாவா 42 எஃப்.ஜே மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 என இரு பைக்குகளிலும் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள், ட்யூயல் ரியர் ஷாக்குகள், எல்இடி விளக்குகள், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹண்டர் 350 பைக்கில் 17 இன்ச்சில் மட்டுமே சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஜாவா 42 எஃப்.ஜே பைக்கில் 18-இன்ச் அல்லது 17-இன்ச்சில் சக்கரங்களை பெறலாம். ஹண்டர் 350 பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது. ஆனால், ஜாவா 42 எஃப்.ஜே பைக்கில் ஃபுல்-டிஜிட்டல் திரை வழங்கப்படுகிறது.

42 fj vs hunter 350

என்ஜின்: புதிய ஜாவா 42 எஃப்.ஜே பைக்கில் 334சிசி லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 29 பிஎச்பி மற்றும் 29.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

ஹண்டர் 350 பைக்கில் 349சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப் படுகிறது. அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப் படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹண்டர் 350 பைக்கை காட்டிலும் அளவில் சிறியதான என்ஜினை கொண்டிருப்பினும், 42 எஃப்.ஜே பைக்கில் அதிக இயக்க ஆற்றலை பெற முடியும். அதேபோல், தோற்றத்திலும் ஹண்டர் 350 பைக்கிற்கு சவால் அளிக்கக்கூடிய வகையில் ஜாவா 42 எஃப்.ஜே உள்ளது. அதாவது, கூடுதலாக செலுத்தும் ரூ.50,000 பணத்திற்கு ஏற்ப பைக்கில் கவனிக்கத்தக்க விஷயங்களை ஜாவா கொண்டுவந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2024, 8:00 [IST]
English summary
Jawa 42 fj vs royal enfield hunter 350 key specifications comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X