இந்தியாவே எதிர்பார்க்கும் பைக் நாளை விற்பனைக்கு வருது! விலை கம்மியா வருமா?
கிளாசிக் ரக பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ஜாவா நிறுவனம் தனது 42 என்ற பைக்கை அப்டேட் செய்து புதுப்பொலிவுடன் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட டீசரில் அப்டேட் செய்யப்பட்ட டிசைன் மற்றும் ஹார்டுவேர்களுடன் இந்த பைக் விற்பனைக்கு வரப்போவது உறுதியாகியுள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் கிளாசிக் ரக பைக்குகளை தயாரிக்கும் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த செக்மெண்டில் ஜாவா நிறுவனமும் கடும் போட்டியை வழங்கி வருகிறது. ஜாவா நிறுவனம் தனது 42 என்ற பைக்கை இந்த செக்மெண்டில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஜாவா நிறுவனம் தனது 42 பைக்கை அப்டேட் செய்து புதுப்பொலிவுடன் இந்திய மார்க்கெட்டில் நாளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ளது, இந்த டீசரில் இந்த புதிய பைக்கில் சீட் சற்று குறுகலான வடிவமைப்புடன் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஹெட்லைட் அருகே புதிய பிராக்கெட்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் நீர்த்துளி வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஹேண்டில் பார்கள் அகலமாக வழங்கப்பட்டுள்ளன. தலைகீழாக பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் சிஸ்டமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சீட்டிங் பொசிஷனை பொறுத்தவரை சற்று முன்னோக்கி அமரும் வகையில் பொசிஷன் லேசாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
இது பைக்கில் சீட் சற்று குறுகலாக வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த பைக்கில் மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பைக்கிற்கு சிறந்த ஃபினிஷை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் ஹார்டுவேரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து பகுதிகளும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒரு சில பகுதிகள் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாம் முன்னரே சொன்னபடி இந்த பைக்கில் சிங்கிள் பீஸ் ஹேண்டில் பார் தற்போது உள்ளதை விட சற்று அகலமாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன்பக்கம் ஃபோக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்வர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுதான் பழைய பைக்கிலும் இருந்தது, அதுவே புதிய பைக்கிலும் தொடர்கிறது.
இதுபோக இந்த பைக்கில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் அனைத்து வேரியன்ட்களிலும் பிளாட்டர் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இந்த பைக் மக்கள் அதிகம் எதிர்பார்த்த மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருவதற்கு தயாராகி வருகிறது.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை ஜாவா எஸ்டி நிறுவனத்தின் புதிய ஏற்பாடு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 334 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 29.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லீப்பர் கிளட்ச் அம்சமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜாவா 42 பைக் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் கூட நேரடியாக போட்டியிடுகிறது. இந்த பைக் 2.20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. இந்த பைக் குறித்த அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் நாளை வெளியிடப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா 42 பைக் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற பைக்காக இருக்கிறது. இந்த பைக் தற்போது அப்டேட் செய்யப்படுவதால் இன்னும் இதன் வாடிக்கையாளர்கள் அதிகமாகவார்கள் என எதிர்பார்க்கலாம். மக்கள் எதிர்பார்த்த பல்வேறு அப்டேட்கள் இந்த பைக்கில் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலையை பொறுத்து இதன் விற்பனை அமையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








