1 ரூபா, 2 ரூபா குறைக்குறதே பெரிய விஷயம்.. இதுல 17 ஆயிரம் ரூபாவ குறைச்சிருச்சா ஜாவா! மழை பெய்ய போகுது!
முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜாவா (Jawa), இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜாவா 42 (Jawa 42) பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.73 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பலவிதமான மாற்றங்களைப் பெற்று, ஓர் அசத்தலான தயாரிப்பாகவே இந்த பைக் தற்போது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், இதன் விலை ஏற்றப்படவில்லை. மாறாக விலை குறைக்கப்பட்டே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
ரூ. 17 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் புதிதாக விலை குறைவான தேர்வுகளை ஜாவா 42 பைக் மாடலில் தயாரிப்பு நிறுவனம் சேர்த்திருக்கின்றது. விலை குறைவாக இருப்பதைப் போலவே சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த பைக் சற்று குறைவாகவே அவற்றைக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், ஸ்போக் வீல், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், மற்றும் அனலாக் எல்சிடி (analogue LCD) போன்ற சிறப்பு வசதிகளையே ஜாவா 42-இன் விலை குறைவான தேர்வுப் பெற்றிருக்கும். அதேவேளையில், இதன் டாப்-எண்ட் வேரியண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ், அலாய் வீல் (ஸ்போக் வீல் ஆப்ஷனும் கிடைக்கும்) மற்றும் முழு டிஜிட்டல் வசதிக் எல்சிடி (digital LCD) ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோன்று நவீன கால அம்சங்களிலும், மெக்கானிக்கல் விஷயத்திலுமே அவை மாறுபட்டுக் காட்சியளிக்கும். மேலும், இந்த பைக்கில் புதுப்பித்தலின்கீழ் பல்வேறு சிறப்பான அம்சங்களை ஜாவா சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், புதிய வகை ஜே-பேந்தர் எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 294 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும்.
இந்த மோட்டார் அதிகபட்சமா 27.32 பிஎஸ் மற்றும் 26.84 என்எம் டார்க் வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சின் அதிக இரைச்சலை ஏற்படுத்தாது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும், மிக சுலபமான மாற்றத்தை வழங்கக் கூடிய ஓர் கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
கியர்பாக்ஸ் அடிப்படையிலான த்ரோட்டில் மேப், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் ஆகிய வசதிகளைத் தாங்கிய கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், மென்மையான ரைடு அனுபவத்தை இந்த பைக்கில் பெற்றுக் கொள்ள முடியும் என தெளிவாகத் தெரிகின்றது. இதுதவிர, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ்-ம் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, இதன் சஸ்பென்ஷன், இருக்கை மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த பைக்கில் பின் பக்க ஷாக் அப்சார்பர் பொருத்துப்படும் இடம் அட்ஜெஸ்ட் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான மாற்றங்களினாலேயே இந்த பைக் இன்னும் பலமடங்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கக் கூடியதாக மாறி இருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக டிஜிட்டல் ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த பைக்கில் ஜாவா வழங்கி இருக்கின்றது. ஆனால், யுஎஸ்பி சார்ஜிங் வசதி-யை ஆப்ஷனலாக மட்டுமே ஜாவா இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது.
மேலும், புதிய ஜாவா 42-வில் 14 விதமான வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் 6 முற்றிலும் புதிய வண்ண தேர்வுகள் ஆகும். மேலும், மேட் மற்றும் கிளாஸ் என இரண்டு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. 18 விதமான வேரியண்டுகளிலேயே புதிய ஜாவா விற்பனைக்குக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மாடலுக்கு போட்டியாகவே ஜாவா 42 விற்பனையில் இருக்கின்றது. இதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியிலேயே தற்போது ஜாவா களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே விலை குறைவான தேர்வை இந்த மாடலில் ஜாவா தற்போது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








