ஜாவா யெஸ்டி நடத்திய பிரேக்ஃபாஸ்ட் ரைடு! பெங்களூருவே கதிகலங்கிடுச்சு!
ஜாவா பெஸ்டி நிறுவனம் பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேக்ஃபாஸ்ட் ரைடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ரைடில் ஜாவா பெஸ்டி பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டார்கள். ரைடர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த ரைடிங் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரைடிங் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும். இப்படியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் இந்நிறுவனம் பன்னார்கட்டா பகுதியில் ரைடிங் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் டிரைவ்ஸ்பார்க் குழுவில் இருந்து சிலர் கலந்து கொண்டோம்.
அங்கு ரைடிங் அனுபவம் எப்படி இருந்தது? அங்கு வந்திருந்த ரைடர்கள் எப்படியான அனுபவங்களை எல்லாம் பெற்றார்கள். அவர்களது கருத்துக்கள் என்ன? என்ற விரிவான விபரங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் மேலே காணலாம். பைக் ரைடிங் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது பெரும் ஊக்கம் அளிக்கும் நிகழ்வாக இருந்தது.

இதுபோன்று பைக் ரைடிங் நிகழ்வுகள் நடத்தப்பட்டால் பைக் ரைடர்கள் பலர் விரும்பி பங்கேற்பார்கள் இப்படியாகத்தான் பெங்களூருவிலும் பலர் பங்கேற்றார்கள். உங்கள் பகுதியில் இது போன்ற ரைடிங் நிகழ்வுகள் நடந்ததா? நீங்கள் பங்கேற்று இருந்தால் அதன் ரைடி் அனுப்பவம் எப்படி இருந்தது என்ற விரிவான விபரங்களை எல்லாம் கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








