ஷோரூம்ல ஸ்டாப்புங்க சரியா ரெஸ்பான்ஸ் பண்ணலையா! இனி அவங்க பின்னாடி தொங்க வேண்டாம்.. ஃபிளிப்கார்ட் இருக்கு!

ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் (Jawa Yezdi Motorcycles) நிறுவனம் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் (Flipkart) உடன் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட முதல் பிரீமியம் நடுத்தர சிசி திறன் கொண்ட இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிராண்டு ஆகும். இதன் வாயிலாக அந்நிறுவனம் அதன் தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைப்பதை மேலும் பலமடங்கு சுலபமானதாக மாற்றியிருக்கின்றது. முன்னதாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் போன்றவை மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது.

இந்த நிலையிலேயே ஃப்ளிப்கார்ட் தளத்தில் தற்போது வீட்டு உபயோ பொருட்களைத் தொடர்ந்து வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. 500 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஓர் தளமே ஃபிளிப்கார்ட் ஆகும். இத்தகைய தளத்தில் ஜாவா யெஸ்டி பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகின்றது.

Jawa partners with flipkart

நாட்டில் இப்போதைய நிலவரப்படி பெரிய அளவில் ஜாவா யெஸ்டி பைக் ஷோரூம்கள் இல்லாத நிலையே தென்படுகின்றது. இதன் விளைவாகவும் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையில் சற்றே பின் தங்கி இருப்பது தெரிகின்றது. இந்த நிலையை விரைவில் இந்த கூட்டணி மாற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டும் இல்லைங்க, ஃபிளிப்கார்ட் உடன் இணைந்து இருப்பதனால் நிறுவனத்தின் தயாரிப்புகளை குறைவான விலையிலும், பொருளை வாங்கி விட்டு பின்னால் பணத்தைச் செலுத்தும் சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, சுலப இஎம்ஐ போன்ற திட்டங்களின்கீழும் இந்த வாகனத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

Jawa partners with flipkart for two wheeler

மேலும், கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் ஃபிளிப்கார்ட் தளம் வாயிலாக பைக்கை வாங்கும் போது பெற்றுக் கொள்ள முடியும். இப்போதைய நிலவரப்படி ஜாவா குறிப்பிட்ட சில பைக் மாடல்களுக்கு சிறப்பு சேமிப்பு பிளான் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 22,500 வரை சேமிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், கேஷ்பேக்கையும் பெற்றுக் கொள்ள முடியம். குறிப்பாக, ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார் பயனர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் என தெரிகின்றது. ஆன்லைனில் வாங்கினால் ஆர்டி வேலைகளை நாமே பார்க்கணுமா என கேட்கத் தோன்றும். ஆனால், ஆன்லைன் வாயிலாக புக் செய்யும்போது குறிப்பிட்ட ஷோரூம் அந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

அவர்கள் ஆர்டிஓ பதிவு, இன்சூரன்ஸ் மற்றும் வரி உள்ளிட்டவற்றிற்கான வழிநடத்தல்களை மேற்கொள்வார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே, எந்தவொரு தடையும் ஆன்லைனில் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது என்பது தெரிகின்றது. இப்போதைய நிலவரப்படி ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின்கீழ் 42ஜே (42J), ஜாவா 350 (Jawa 350), 42, 42 பாபர் (42 Bobber) மற்றும் பெராக் (Perak) ஆகிய பைக் மாடல்களே விற்பனையில் இருக்கின்றன.

இதேபோல், யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின்கீழ் மூன்று விதமான பைக் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரோட்ஸ்டர் (Roadster), ஸ்கிராம்ப்ளர் (Scrambler) மற்றும் அட்வென்சர் (Adventure) ஆகிய மூன்று மோட்டார்சைக்கிளே விற்பனையில் உள்ளன. இவை அனைத்தும் வரும் நாட்களில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே அந்நிறுவனம் தற்போது உலக புகழ்பெற்ற ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் பிராண்டுடன் இணைந்திருக்கின்றது. இதன் விளைவாக குறைவான விலையில் பைக்குகளை வாங்கிக் கொள்ள முடியும். அத்துடன் விழாக்கால சிறப்பு சலுகைகளையும் தடையின்றி பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 21:33 [IST]
English summary
Jawa yezdi motorcycles partners with flipkart to enhance online motorcycle purchases in india
மேலும்... #jawa motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+