இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏகப்பட்ட சலுகைகள்... இலவச இன்ஸ்சூரன்ஸ் முதற்கொண்டு இருக்கு!!
ஜிதேந்திரா இவி (Jitendra EV), இந்தியாவில் கடந்த பல வருடங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஈடுப்பட்டுவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். ஷா குழுமத்தில் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ள இந்த சலுகைகளின்படி, ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எவ்வளவு குறைவான விலைகளில் வாங்கலாம் என்பதையும், சலுகைகளை பெறும் ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ரியல் எஸ்டேட், சில்லறை விற்பனை, மென்பொருள் என பல்வேறு துறைகளில் செயல்பட்டுவரும் ஷா குழுமம் 2016ஆம் ஆண்டில் ஜிதேந்திரா இவி என்கிற பெயரில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனத்தை நிறுவியது. ஷா குழுமத்தை நிறுவியவரான ஜிதேந்திரா ஷா அவர்களின் நினைவாக அவரது பெயரில் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் நிறுவப்பட்டது.

இதேபோன்று, இந்தியாவில் கடந்த சில வருடங்களில் பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றாலும், தற்சமயம் இந்தியாவின் டாப்-20 எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக ஜிதேந்திரா இவி உள்ளது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, இலவச இன்ஸ்சூரன்ஸ் மற்றும் ஸ்பெஷல் லாயலிட்டி போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இதன்படி, ஜிதேந்திரா ஜே.எம்.டி 1000 எச்.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.10,000 உடனடி பணம் தள்ளுபடி உடனும், ஜே.எம்.டி 1000 3கே எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.20,000 உடனடி பணம் தள்ளுபடி உடனும் வாங்கலாம். இந்த பணம் தள்ளுபடி சலுகையை பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இந்த ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, ஜிதேந்திரா ஜே.எம்.டி 1000 எச்.எஸ் மற்றும் ஜே.எம்.டி 1000 3கே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர் இலவச இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தையும் பெறலாம். ஆனால், இதற்கு நீங்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிடப்பட்டு உள்ள ஜிதேந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க வேண்டும். இவை இல்லாமல், ஜே.எம்.டி 1000 எச்.எஸ் மற்றும் ஜே.எம்.டி 1000 3கே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஸ்பெஷல் லாயலிட்டி போனஸையும் ஜிதேந்திரா இவி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜிதேந்திரா இவி நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே குறைந்தப்பட்சம் ஏதேனும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்கள் லாயல் ஜிதேந்திரா இவி கஸ்டமர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மீண்டும் ஜே.எம்.டி 1000 எச்.எஸ் அல்லது ஜே.எம்.டி 1000 3கே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றை வாங்கும்போது அவர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 பணம் தள்ளுபடி கிடைக்கும்.
ஜிதேந்திரா இவி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஜே.எம்.டி 1000 எச்.எஸ், ஜே.எம்.டி 1000 எச்.எஸ் கார்கோ, ஜே.எம்.டி 1000 3கே மற்றும் பிரிமோ உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஆகஸ்ட் மாத சலுகைகளை பெறும் ஜே.எம்.டி 1000 எச்.எஸ் மற்றும் ஜே.எம்.டி 1000 3கே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவை இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக உள்ளன.
இதில், ஜே.எம்.டி 1000 3கே எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.48 லட்சமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.12kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. ஜே.எம்.டி 1000 எச்.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.12 லட்சம் ஆகும். இதில், 2kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேறு யாரிடத்தில் இருந்தும் முதலீட்டை பெறாமல் சொந்தமாக செயல்படும் இவி நிறுவனமாக ஜிதேந்திரா இவி செயல்படுகிறது. பொதுவாகவே, இவ்வாறான கார்ப்பிரேட் நிறுவனங்களில் இருந்து சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளிவருவது அரிதான ஒன்றே. இருப்பினும், இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்த சலுகைகளை ஜிதேந்திரா இவி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








