ஏழை-எளிய மக்களாலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும்! விலை ரொம்ப குறைவு! 80கிமீ தூரம் வரை பயணிக்கலாம்

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஜிதேந்திரா இவி (Jitendra EV). இது ஓர் மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே தற்போது மிக மிக குறைவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

பிரைமோ (Primo) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பிரைமோ எஸ் (Primo S) மற்றும் பிரைமோ பிளஸ் (Primo Plus) ஆகியவையே அவை ஆகும். இது ரூ. 79,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

Jitendra primo electric scooter

உயர் வகை தொழில்நுட்பம் மற்றும் தனியாக கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் உள்ளிட்ட சிறப்பம்சங்களால் இந்த பிரைமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரி பேக் ஐபி67 (IP67) தர சான்று பெற்றதாகும். இது ஓர் ஸ்மார்ட் பிஎம்எஸ் (Smart BMS) வசதிக் கொண்ட பேட்டரி பேக்கும்கூட.

இத்துடன், கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் அது குறித்த எச்சரிக்கையை வழங்கும் வசதிக் கொண்ட டிஜிட்டல் கிளஸ்டர், ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக யுஎஸ்பி போர்ட், எல்இடி லைட்டுகள், சைடு ஸ்டாண்டு சென்சார், அதிக உஷ்னம் குறித்து எச்சரிக்கும் அலர்ட் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர சைடு ஸ்டாண்டு சென்சார், டிஸ்க் பிரேக் (முன் வீலில் இடம் பெற்றிருக்கும்), அலாய் வீல், டெலிஸ்கோபிக் மற்றும் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ஆகியவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பேட்டரி பேக்கை பொருத்த வரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

2.04 kWh மற்றும் 3.26 kWh பேட்டரி பேக்கே அவை ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 82 கிமீ முதல் 137 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் உள்ள தரவுகளின்படி, பிரைமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V 26A திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகின்றது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வெறும் 3.5 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை சார்ஜ் செய்தாலேயே இந்த ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

1000W மோட்டாரே இதில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 52 கிமீ ஆகும். 7 டிகிரி உயரமான பாதையைகூட இந்த மோட்டார் சமாளித்துவிடும். ஜிதேந்திரா நிறுவனம் வாகனத்திற்கு 3 ஆண்டுகள் வாரண்டியையும், பேட்டரி பேக்கிற்கு 2+1 ஆண்டுகள் வாரண்டியையும் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது. கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களே அவை ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை ஓலா எஸ்1 எக்ஸ் மாடலுக்கும், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களை கவரும் நோக்கில் ஜிதேந்திரா நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியாவின் ஏழை-எளிய மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 23:35 [IST]
English summary
Jitendra primo electric scooters launched in india at inr 79999
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+