இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!

அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் நான்கு சூப்பர் பைக்குகளை களம் இறக்கி உள்ளது. சூப்பர் பைக் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பைக்குகள் எல்லாம் தற்போது இந்தியாவில் களமிறங்கியுள்ளன. இதுபோக இந்நிறுவனம் ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாமை தனது பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வருகிறார்கள்.

John Abraham Aprilia Brand Ambassador

இந்நிலையில் அப்ரிலியா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இரண்டு 660 பைக்ககள் உள்ளிட்ட நான்கு சூப்பர் பைக்குகளை நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகள் எல்லாம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பைக்குகளாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதனால் இதன் விலை அதிகமாக இருந்தாலும் ரசிகர்கள் பலர் இந்த பைக்குகளை வாங்க விரும்புவார்கள் என்பதால் இதை செய்துள்ளது.

அதன்படி அப்ரிலியா ஆர்எஸ்வி4 ஃபேக்டரி, அப்ரிலியா ஆர்எஸ் 660, அப்ரிலியா டியூனோ 660 ஆகிய பைக்குகள் இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகியுள்ளன. இதுபோக அப்ரிலியா டியூரெக் 660 என்ற பைக் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்குகளை இனி நீங்கள் அருகில் உள்ள அப்ரிலியா மோட்டோப்ளெக்ஸ் டீலர்ஷிப்களில் நேரடியாக சென்று புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த பைக்கில் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

John Abraham Aprilia Brand Ambassador

ஆர்எஸ்வி4 ஃபேக்டரி: இது சாதாரணமாக சாலையில் ஒட்டும் பைக் கிடையாது. இந்த பைக் தயாரிக்கப்படும் போது டிராக்குகளில் ஓட்டுவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் பயணிக்கும் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு ஏரோ டைனமிக்ஸ் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்ஜினை பொருத்தவரை வி4 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் லேசாக இந்த பைக்கை திருகினாலும் மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டதாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்660: இந்த பைக் டிசைன் மற்றும் லுக்கிற்கு பெயர் பெற்ற பைக்காகும். வெறும் லுக் மட்டும் கிடையாது. இந்த பைக்கில் உள்ள இன்ஜினும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ரேஸிங் பைக்கை ஓட்ட விரும்புபவர்களுக்கு இது சிறந்த பைக்காக இருக்கும் ரேஸ் டிராக்கில் பயின்ற வித்தைகளை எல்லாம் தெருக்களில் காட்ட வேண்டும் என்றால் இந்த பைக் சிறந்த பைக் தான்.

John Abraham Aprilia Brand Ambassador

டியூனோ 660 : பைக்கை பொறுத்தவரை இன்ஜினை கொண்ட பைக்காக இருக்கிறது. நகர்ப்புறங்களில் சாலையில் பயணிக்க சிறந்த பைக் தான் இதன் சஸ்பென்ஷன் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யப்படும் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. சிட்டி பகுதியில் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் பைக்கை ஓட்ட வேண்டும் என்றால் இந்த பைக்கை தேர்வு செய்யலாம். அதிக டிராபிக்கிலும் அதிக பெர்ஃபார்மென்ஸை காட்டும் பைக்காக இது இருக்கும்.

டியூரெக் 660: இது ஒரு அட்வெஞ்ச்சர் ரக பைக் ஆகும். அட்வெஞ்ச்சர் ரக பைக் விரும்புவோர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. பள்ள மேடுகள், மலைகள், காடுகள், தண்ணீர் நிறைந்த பகுதி ஆகிய அனைத்து இடங்களிலும் இந்த பைக்குகளை கொண்டு பயணிக்க முடியும். அதிக மணல் நிறைந்த பாலைவனத்தில் கூட இந்த பைக்கில் பயணிக்கும் அட்வெஞ்சரை விரும்புபவர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

John Abraham Aprilia Brand Ambassador

அப்ரிலியா நிறுவனம் இந்த நான்கு பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாமை பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவித்துள்ளனர். இவரை வெறும் நடிகர் என்பதற்காக பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவிக்கவில்லை. இவர் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பைக்குகளை விரும்பும் ஒரு பைக் விரும்பியாக இருக்கிறார். அதன் காரணமாகவும் அந்நிறுவனத்தின் ரேஸிங் கலாச்சாரம் மற்றும் அந்நிறுவனத்தின் பாரம்பரியத்துடன் இவரது செயல்பாடுகள் ஒத்துப் போவதால் இவரை பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளனர்.

ஜான் ஆபிரகாம் பிராண்ட் அம்பாசிடராக மட்டுமல்லாமல் அப்ரிலியாவின் பெரிய ரசிகராகவும் இருக்கிறார். மேலும் அப்ரிலியா பைக்குகளை இவர் அதிகம் விரும்புகிறார் இதனால் அவரை அந்நிறுவனம் பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் சேர்மன் டைகோ கிராபி கூறும் போது: "நாங்கள் ஜான் ஆபிரகாமை அப்துல்லா குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஜான் ஆபிரகாம் பெர்ஃபார்மன்ஸ் அட்வெஞ்ச்சர் ரக வாகனங்களை விரும்புகிறார். அதற்கு ஏற்ற தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்கிறது. இந்தியாவில் அப்ரிலியா ஆர்எஸ் 457 என்ற பைக் எந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கை பெற்றோ அதே அளவிற்கு தற்போது அதிகமாக அறிமுகமாகியுள்ள நான்கு சூப்பர் பைக்குகளும் வேறு வேறு செக்மெண்ட்களில் மக்கள் நம்பிக்கையை பெறும் மக்களின் தேவை பூர்த்தி செய்வதற்காக தான் இந்த தயாரிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளோம்." என்று கூறினார்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மெல்ல மெல்ல சூப்பர் பைக்குகளை விரும்பும் ஒரு நாடாக மாறி வருகிறது. இந்தியாவின் சூப்பர் பைக் விலை வாங்க ஏராளமான மக்கள் இருப்பதால் அப்ரிலியா போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டு தயாரிக்கும் பைக்குகளை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. இது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் இன்னும் இதன் மார்க்கெட் அதிகமானால் இந்தியாவிலேயே இந்த தயாரிப்புகளை தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2024, 11:31 [IST]
English summary
John abraham aprilia brand ambassador launches super bikes india
மேலும்... #அப்ரில்லா #aprilia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X