இந்த அளவுக்கு தாராள மனசு இருக்க கூடாதுங்க! எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது!
ஜாய் இ-பைக் (Joy e-bike) நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. தீபாவளியில் கஸ்டமர்களை ஈர்க்கும் முயற்சியாக ஏற்கனவே பல நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கான சலுகைகளை அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஜாய் இ-பைக் நிறுவனமும் அதன் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஜாய் இ-பைக் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எவ்வளவு குறைந்த விலையில் வாங்கலாம் என்பதையும், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் கடந்த சில வருடங்களில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி லிமிடெட் ஆகும். இதன் செயல்பாட்டின் கீழ் இரு பிராண்ட்கள் செயல்படுகின்றன. ஒன்று, ஜாய் இ-பைக்; மற்றொன்று, ஜாய் இ-ரிக் ஆகும்.

ஜாய் இ-ரிக்கில் இருந்து எலக்ட்ரிக் ஆட்டோக்கள் போன்ற 3-சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜாய் இ-பைக்கில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் ஆகும். இந்த வகையில் ஜாய் இ-பைக்கில் விற்பனை செய்யப்படும் மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தான் தற்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.30,000 வரையிலான பண்டிகை கால சிறப்பு சலுகைகள் இந்த இ-ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இது இல்லாமல், ஜாய் இ-பைக்கில் இருந்து விற்பனை செய்யப்படும் அத்தனை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஜாய் இ-பைக் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இந்த சலுகைகளை பெறலாம்.
ஜாய் இ-பைக்கின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட்டிலும் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 15ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ளது. அத்துடன், இந்த பண்டிகை காலத்தில் வாங்கப்படும் குறிப்பிட்ட சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விரிவான இன்ஸ்சூரன்ஸ் காப்பீடை வழங்கவும் ஜாய் இ-பைக் திட்டமிட்டுள்ளது. இதற்காக ப்ளூபெல்ஸ் இன்ஸ்சூரன்ஸ் ப்ரோகிங் என்கிற தனியார் நிறுவனத்துடன் ஜாய் இ-பைக் இணைந்துள்ளது.
மேலும், ஜாய் இ-பைக்கின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர் சவுகரியமாக மாதத்தவணைகளை கட்ட மங்களம் இன்டஸ்ட்ரீயல் என்கிற ஃபைனான்ஸ் நிறுவனத்துடனும் கூட்டணி சேர்ந்துள்ளது. மேலும், 15 வங்கிகள் மூலமாகவும் ஜாய் இ-பைக்கின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளியதாக வாங்கலாம். இந்த சலுகைகள் அனைத்தும் ஒன்றே ஒன்றுக்கு தான், வாடிக்கையாளர்களை அதிகரிப்பது ஆகும்.
ஜாய் இ-பைக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மிஹோஸ், வூல்ஃப், க்ளோப், ஜென் நெக்ஸ்ட் என 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை நான்கும் தோற்றத்தில் ஒவ்வொரு மாதிரியானவை. ரூ.30,000 வரையில் தீபாவளி சலுகையை பெற்றிருக்கும் மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று கிளாசிக்கான தோற்றத்தை கொண்டுள்ளது.
மிஹோஸின் மீது ஜாய் இ-பைக் நிறுவனம் கொஞ்சம் கூடுதல் நம்பிக்கையை வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். தற்சமயம், மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 17,021 ஆகும். ஜாய் இ-பைக் விற்பதிலேயே மிஹோஸ் தான் விலைமிக்கது ஆகும். மற்ற 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் ரூ.90,000ஐ கூட தாண்டவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.30,000 வரையில் சலுகைகளை பெற்றால், ஜாய் இ-பைக் மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சம் அளவில் வாங்கலாம். இருப்பினும், என்ன மாதிரியான சலுகைகள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்படுகின்றன என்பதை ஜாய் இ-பைக் விரிவாக தெரிவிக்கவில்லை. தீபாவளியை டார்க்கெட் செய்து நிறைய நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளதால், மிஹோஸின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








