தீபாவளிக்கு துணிமணி எடுக்குற மாதிரி இதில் ஒரு பைக்கை வாங்க வேண்டியதுதான்!! இப்போது விட்டால் ரொம்ப கஷ்டம்!
கபீரா மொபைலிட்டி (Kabira Mobility), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-சக்கர வாகன விற்பனையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று. கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் காரணமாகவே, கோவாவை சுற்றிய நகரங்களிலும், சென்னை போன்ற தென்னிந்திய நகரங்களிலும் பைக்குகளை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப் ஷோரூம்களை கொண்டுள்ளது. இத்தகைய நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதன் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஏகப்பட்டவை உள்ளன. ஏனெனில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வது எளியது. அதுமட்டுமின்றி உற்பத்தி செலவும் அதிகமாக இருக்காது. ஆனால், எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு குறைவாகவே உள்ளன.

அவற்றுள் ஒன்றுதான், கபீரா மொபைலிட்டி ஆகும். பெயருக்கேற்ப, இந்த நிறுவனம் உருவாக்கும் எலக்ட்ரிக் பைக்குகளும் கம்பீரமான தோற்றத்தை கொண்டவைகளாக உள்ளன. தற்போதைக்கு கே.எம்3000 (KM3000) மற்றும் கே.எம்4000 மார்க் 2 (KM4000 Mark 2) என இரு எலக்ட்ரிக் பைக்குகள் கபீரா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற நிறுவனங்களை போன்று, பண்டிகை காலத்தை முன்னிட்டு கபீரா மொபைலிட்டி நிறுவனமும் பணம் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, வருகிற நவம்பர் 15ஆம் தேதி வரையில் கபீரா கேஎம்3000 மற்றும் கேஎம்4000 மார்க் 2 எலக்ட்ரிக் பைக்குகளை வாங்குவோர் ரூ.10,000 பணம் தள்ளுபடியை பெறலாம். அதாவது, பைக்குகளின் விலையில் ரூ.10,000 குறைத்துக் கொள்ளப்படும். அத்துடன், இந்த காலக்கட்டத்தில் கபீரா எலக்ட்ரிக் பைக்கை வாங்குவோர் 5 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டத்தையும் பெறலாம்.
இவற்றுடன் ஏகப்பட்ட பரிசுகள் மற்றும் போனஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கபீரா எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் கஸ்டமர்கள் 2 நாட்களுக்கு இலவசமாக கோவாவில் தங்குவதற்கான வாய்ப்பை பெறலாம். மேலும், ரூ.999 மதிப்பிலான ஆக்ஸஸரீஸ் மற்றும் ரைடருக்கு தேவையான சில பொருட்களும் கபீரா மொபைலிட்டி பிராண்டில் இருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த பண்டிகை கால சலுகைகளை வழங்குவதை கடந்த அக்டோபர் 10ஆம் தேதியில் இருந்தே கபீரா மொபைலிட்டி துவங்கிவிட்டது. இந்த நிறுவனத்திற்கு கோவா, சென்னை, பெங்களூர், மும்பை, புனே, டெல்லி, அகமதாபாத், ஜெய்பூர் மற்றும் வதோதாராவில் டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. இந்த நகரங்களில் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் கபீரா மொபைலிட்டி தீவிரமாக உள்ளது.
இதன் ஒருபகுதியாக, இந்த பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து அதன் ஷோரூகளில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த கபீரா திட்டமிட்டுள்ளது. இந்த மூலமாக, கபீரா கேஎம்3000 மற்றும் கேஎம்4000 மார்க் 2 எலக்ட்ரிக் பைக்குகளை கஸ்டமர்கள் டெஸ்ட் செய்து பார்த்து புக் செய்யலாம். அதேபோல், கபீரா மொபைலிட்டி நிறுவனத்தின் தொழிற்சாலை குழுவினர் உடனும் கலந்துரையாடுவதற்கு கஸ்டமர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
டீலர்ஷிப் ஷோரூம் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதுடன், ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸையும் பலப்படுத்த பெரிய தொகைகளை முதலீடு செய்ய கபீரா திட்டமிட்டுள்ளது. தற்சமயம் 350க்கும் அதிகமான சர்வீஸ் செண்டர்களை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கபீரா கொண்டுள்ளது. இருப்பினும், சர்வீஸை பெறுவதற்கு கஸ்டமர்கள் எந்த விதத்திலும் சிரமப்பட கூடாது என்பதில் கபீரா மொபைலிட்டி உறுதியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கபீரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை பெரிய அளவில் இல்லை. இதற்கு காரணம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு எலக்ட்ரிக் பைக்குகள் மீது இன்னும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அந்த நம்பிக்கையை கொண்டுவர வேண்டுமென்றால், இவ்வாறான சலுகைகள், அதிக காலத்திற்கு உத்தரவாதங்களை வழங்குவது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications








