மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் பைக்ஸ்... டிசைனில் கவாஸாகி பைக்ஸ் தோற்றுப்போகும்!! விலை எவ்வளவு தெரியுமா?

கபீரா மொபைலிட்டி (Kabira Mobility) நிறுவனம் அதன் புதிய கே.எம்3000 (KM3000) மற்றும் கே.எம்4000 (KM4000) எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக்குகளை பற்றியும், கபீரா மொபைலிட்டி நிறுவனத்தை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான கபீரா மொபைலிட்டி அதன் கே.எம்3000 மற்றும் கே.எம்4000 எலக்ட்ரிக் பைக்குகளை சில வருடங்களுக்கு முன்பே விற்பனைக்கு கொண்டுவந்து விட்டது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட கேஎம்3000 மற்றும் கேஎம்4000 பைக்குகள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

kabira launched km3000 and km4000

புதிய கேஎம்3000 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.74 லட்சமாகவும், கேஎம்4000 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.76 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளிலும் அலுமினியம் கோர் ஹப் மோட்டார் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கபீரா உருவாக்கி உள்ளது.

கபீரா கேஎம்3000 ஆனது பேனல்கள் அதிகம் நிறைந்த ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும். அதுவே, கேஎம்4000 ஆனது ஓர் ஸ்ட்ரீட் நேக்டு பைக் ஆகும். தோற்றத்தில்தான் இவை இரண்டும் வித்தியாசமானவை. மற்றப்படி, ஒரே மாதிரியான டைமண்ட் ஸ்டீல் குழாயை அடிப்படையாக கொண்டே இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளும் உருவாக்கப்படுகின்றன.

kabira launched km3000 and km4000

இந்த பைக்குகளின் விலை குறைவான வேரியண்ட்களில் ஸ்டீல் ஸ்விங்கார்மும், விலைமிக்க வேரியண்ட்களில் அலுமினியம் ஸ்விங்கார்மும் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் இடம்பெறுகின்றன. இந்த பைக்குகளின் 17-இன்ச் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

அத்துடன், கூடுதல் பாதுகாப்புக்கு கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ஆன்போர்டு சார்ஜர் உடன் இந்த பைக்குகளில் பேட்டரி தொகுப்பு அடுக்கப்பட்டது போன்று வழங்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் மற்றும் வி என இரு விதமான வேரியண்ட்களில் கபீரா கேஎம்3000 மற்றும் கேஎம்4000 எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களில் 4.1 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் கொடுக்கப்படுகிறது.

kabira launched km3000 and km4000

வி வேரியண்ட்டில் சற்று அளவில் பெரிய 5.15kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் சிறிய பேட்டரி ஆப்ஷனில் 178கிமீ வரையிலான மைலேஜையும், பெரிய பேட்டரி ஆப்ஷனில் 201கிமீ வரையிலான மைலேஜையும் பெறலாம். ஆனால், டாப்-ஸ்பீடில் மாற்றம் இல்லை. இரண்டிலும் ஒரே மாதிரியாக 120kmph வேகத்தை பெறலாம். 0-40kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.

இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் அதிகப்பட்சமாக கிடைக்கும் டார்க் திறன் 192 என்.எம் ஆகும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கேஎம்3000 மற்றும் கேஎம்4000 பைக்குகளை மார்க்-2 மாடல்ஸ் என கபீரா நிறுவனம் அழைக்கிறது. கேஎம்3000 மற்றும் கேஎம்4000 மார்க் 2 மாடல்களை சில முக்கிய நகரங்களில் கஸ்டமர்ஸ் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம் என கபீரா தெரிவித்துள்ளது. டெலிவிரிகள் 2024 மார்ச்சில் இருந்து துவங்கவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தை பொருத்தவரையில், முந்தைய வெர்சனை காட்டிலும் புதிய கேஎம்3000 மற்றும் கேஎம்4000 எலக்ட்ரிக் பைக்குகள் நன்கு மெருக்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கேஎம்4000 நாக்டு எலக்ட்ரிக் பைக் பயங்கரமான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு விதமான டிசைனில் இருப்பதை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2024, 18:59 [IST]
English summary
Kabira mobility launched km3000 and km4000 electric bikes price new features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X