எலக்ட்ரிக் பைக்கை இதுக்காகவே நம்பி வாங்கலாம்! சர்வீஸுக்கு எங்கேயும் போக வேண்டாம்!!
கபீரா மொபைலிட்டி (Kabira Mobility), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. கோவாவை தலைமையிடமாக செயல்படும் இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் விளைவாக, எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்த பிறகு அவற்றிற்கு வழங்கும் சர்வீஸ்களில் புதிய மைல்கல்லை கபீரா மொபைலிட்டி நிறுவனம் கடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தரத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எந்தவொரு வாகனத்திற்கும், விற்பனை செய்வதற்கு முன்பை விட விற்பனை செய்த பின் எந்த தரத்தில் சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன என்பதுதான் முக்கியமாகும். இது எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால், எலக்ட்ரிக் பைக்கை வாங்க இன்னமும் சில பேர் தயக்கம் காட்டுவதற்கு, வாங்கிய பின் ஓட்ட, ஓட்ட எலக்ட்ரிக் பைக் எத்தகைய தரத்தில் இருக்குமோ என்கிற பயம் தான் காரணம் ஆகும்.

மக்களின் இந்த பயத்தை போக்க வேண்டுமெனில், அதற்கேற்ப நல்ல தரத்தில் எலக்ட்ரிக் பைக்குகளை வழங்குவதுடன், விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ்களை முறையாக வழங்க வேண்டும். குறைந்தப்பட்சம், நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்து கஸ்டமர்களும் எளிதாக அணுகும் வகையில் சர்வீஸ் செண்டர்களை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் கோவாவை சேர்ந்த கபீரா மொபைலிட்டி உறுதியாக உள்ளது.
இதன்படி, கபீரா மொபைலிட்டி நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் செண்டர்களின் எண்ணிக்கை 350ஐ வெற்றிக்கரமாக கடந்துள்ளது. தங்களை நம்பிவரும் கஸ்டமர்களை திருப்திப்படுத்துவதில் இது புதிய மைல்கல் என தெரிவிக்கும் கபீரா மொபைலிட்டி நிறுவனம் இந்த எண்ணிக்கையை 2025ஆம் ஆண்டிற்குள் 1000ஆக அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது.
கபீரா மொபைலிட்டியின் இந்த 350க்கும் மேற்பட்ட சர்வீஸ் செண்டர்கள் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கபீரா பைக் சர்வீஸ் செண்டர்களில் வழக்கமான சர்வீஸ்களில் இருந்து சிக்கலான பழுதுப்பார்ப்புகள் வரையில் அனுபவமிக்க மெக்கானிக்குகளால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மெக்கானிக்குகள் கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை பழுதுப் பார்ப்பதற்கு என்றே பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.

கபீரா எலக்ட்ரிக் பைக்குகளுக்கு தேவையான பார்ட்ஸ் இந்த மையங்களில் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும், அவசர காலத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பைக்கை சர்வீஸ் மையத்திற்கு கொண்டுவரும் சேவைகளும் வழங்கப்படுகின்றன. கபீரா ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கஸ்டமர்கள் காத்திருக்க வேண்டிய நேரமும் குறைகிறது.
இதுகுறித்து கபீரா மொபைலிட்டி நிறுவனத்தின் சிஇஓ ஜெய்பிர் சிவாச் கூறுகையில், "எலக்ட்ரிக் 2-வீலர் துறையில் ஒரு புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு, தயாரிப்பை போலவே விற்பனைக்கு பிந்தைய சேவையும் முக்கியமானது ஆகும். இந்தியா முழுவதும் 350க்கும் அதிகமான சேவை மையங்களை தொடங்குவதற்கான எங்கள் முடிவு ஆனது எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு நேரடியான பிரதிப்பலிப்பாகும்" என்றார்.
கபீரா மொபைலிட்டி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் கேஎம் 3000 மற்றும் கேஎம்4000 என 2 எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கே.எம்3000 பைக்கின் விலை ரூ.1.27 லட்சமாகவும், கே.எம்4000 பைக்கின் விலை ரூ.1.37 லட்சமாகவும் தற்சமயம் உள்ளது. இந்த பைக்குகளின் ரேஞ்ச் 150கிமீ வரையில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கபீரா மொபைலிட்டி நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. நாடு முழுவதும் 350க்கும் அதிகமான கபீரா மொபைலிட்டி ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் மையங்கள் இருப்பதுதான் அதற்கு சாட்சியாகும். இதனால், 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் 1000 ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் மையங்களை கபீரா மொபைலிட்டி நிறுவி விடும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








