டிஸ்கவுண்ட் வவுச்சர் கொடுக்குறாங்க!! பொங்கலுக்கு இதில் ஒரு கவாஸாகி பைக்கை வீட்டுக்கு கொண்டுவாங்க!

கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் புதிய 2024ஆம் ஆண்டை முன்னிட்டு அதன் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, எந்தெந்த கவாஸாகி மோட்டார்சைக்கிள்களை இந்த ஜனவரி மாதத்தில் சலுகைகள் உடன் வாங்கலாம் என்பதை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

'குட் டைம்ஸ் வவுச்சர்' (Good Times Voucher) என்ற பெயரில் சலுகைக்கு உறுதியளிக்கக்கூடிய சீட்டு மூலமாக கவாஸாகி நிறுவனம் அதன் சில பைக்குகளுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வவுச்சர் மூலம் பெறக்கூடிய தொகை ஆனது மோட்டார்சைக்கிளை பொறுத்து வேறுப்படுகிறது. கவாஸாகியின் இந்த சலுகைகளில் மொத்தம் 4 மோட்டார்சைக்கிள்கள் உட்படுகின்றன. அவையாவன,

kawasaki good times voucher

1. கவாஸாகி வல்கன் எஸ் (Kawasaki Vulcan S): குட் டைம்ஸ் வவுச்சர் மூலமாக இந்த க்ரூஸர் ரக கவாஸாகி பைக்கை ரூ.60,000 குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது, இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து ரூ.60,000 குறைத்துக் கொள்ளப்படும். வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.7.10 இலட்சமாக உள்ளது.

கவாஸாகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில்தான் புதிய க்ரூஸர் பைக்காக எலிமினேட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. வல்கன் எஸ் ஆனது எலிமினேட்டரை விட விலை மிக்க மற்றும் செயல்படுதிறன் மிக்க க்ரூஸர் பைக் ஆகும். வல்கன் எஸ் பைக்கில் 649சிசி லிக்யுடு கூல்டு, ஃப்யுல் இன்ஜெக்டட், 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

kawasaki good times voucher

2. கவாஸாகி நிஞ்சா 400 (Kawasaki Ninja 400): வல்கன் எஸ் பைக்குக்கு அடுத்து புது 2024ஆம் ஆண்டிற்காக அதிக தொகையில் சலுகையை பெறும் பைக். ரூ.40,000 மதிப்பிலான வவுச்சர் உடன் நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் வாங்கலாம். ரூ.5.24 இலட்சத்தில் இருந்து இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் துவங்குகின்றன.

கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு உலகம் முழுவதிலுமே நல்ல வரவேற்பு உள்ளது. அதனை புரிந்துக் கொண்டு, அதேசமயம் குறைந்த விலையில் நிஞ்சா பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக கவாஸாகி அறிமுகப்படுத்தியதே நிஞ்சா 400 ஆகும். இந்திய சந்தையில் ஸ்டாண்டர்ட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த பைக் கிடைக்கிறது.

kawasaki good times voucher

3. கவாஸாகி நிஞ்சா 650 (Kawasaki Ninja 650): மேலே கண்ட நிஞ்சா 400 பைக்கை காட்டிலும் செயல்படுதிறன்மிக்க நிஞ்சா பைக்கான நிஞ்சா 650-ஐ ரூ.30,000 குட் டைம்ஸ் வவுச்சர் உடன் வாங்கலாம். வல்கன் எஸ் பைக்கில் பொருத்தப்படும் அதே 650சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் நிஞ்சா 650-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.16 இலட்சமாக உள்ளது.

4. கவாஸாகி வெர்ஸஸ் 650 (Kawasaki Versys 650): மேலே கண்ட நிஞ்சா 650 பைக்கின் நீண்ட தொலைவு பயணத்திற்கான லாங்-டூரர் வெர்சன் இதுவாகும். இந்த பைக்கிற்கு ரூ.20,000 வவுச்சர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலை நிஞ்சா 650 பைக்கை விட ரூ.60,000 அளவில் அதிகமாக உள்ளது.

kawasaki good times voucher

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையை சரிய துவங்கும் நேரத்தில்தான் இவ்வாறான வவுச்சர் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டாக் வரையில் மட்டுமே கவாஸாகி பைக்குகளில் இந்த சலுகை கிடைக்க உள்ளன. அதாவது, கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் இந்த சலுகைகள் 2024 ஜனவரி 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்குமாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 16:40 [IST]
English summary
Kawasaki good times voucher for selected bikes check all details here
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X