முதல் ஆளாக இந்தியாவில் போனி செய்த கவாஸாகி.. இந்த பைக்குல புதுசு புதுசா நிறைய அம்சங்களை சேர்த்திருக்கு!
கடையை திறந்த உடன் போனி செய்ய வந்த ராசியான முகத்தை போல, புத்தாண்டு தொடங்கிய உடன் முதல் ஆளாக தனது வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki Motors Pvt. Ltd.).
2024 ஜனவரி 1ஆம் தேதி, புதுப்பிக்கப்பட்ட நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் (Kawasaki Ninja ZX-6R) பைக் மாடல் விற்பனைக்கு செய்யப்படும் என சென்ற ஆண்டு அது அறிவித்து இருந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய அறிவிப்பை அது நிஜமாக்கி இருக்கின்றது. புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் இந்த பைக் பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புத்தாண்டின் தொடக்கத்தை சிறப்பிக்கும் விதமாக கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் 2021 நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் (Ninja ZX-6R) பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கின் அறிமுகத்தின் வாயிலாக இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்கிய முதல் நிறுவனமாக கவாஸாகி மாறி இருக்கின்றது.
இது ஓர் புதுப்பிக்கப்பட்ட நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் ஆகும். 2023 நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கைக் காட்டிலும் லேசாக கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்கு இந்த பைக் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால், இதன் விலை கணிசமாக உயர்ந்து இருக்கின்றது. புதிய கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கிற்கு ரூ. 11 லட்சத்து 9 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிகுந்த ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட ஓர் பைக் மாடலே நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் ஆகும். இந்த கூற்றை அப்படியே இந்த பைக்கிலும் கவாஸாகி தக்க வைத்திருக்கின்றது. இப்போது சூப்பர் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக இந்த பைக் மாறி இருக்கின்றது.
இந்த பைக்கில் சூப்பரான திறன் வெளிப்பாட்டிற்காக 636 சிசி லிக்யூடு கூல்டு இன்-லைன் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் புதிய மாசு உமிழ்வு தரத்திற்கு உகந்த ஒன்றாகும். இந்த அப்டேட்டை முக்கிய அப்டேட்டாக எஞ்சினில் கவாஸாகி வழங்கி இருக்கின்றது.

இது 128 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிக் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிறந்த சஸ்பென்ஷனுக்காக பைக்கின் முன் பக்கத்தில் அட்ஜஸ்டபிள் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் முன் பக்கத்தில் இரட்டை 310 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மிக சிறந்த இழுவை மற்றும் ரைடிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் பைரல்லி டயப்ளோ ரோஸ்ஸே 4 வகை டயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, முக்கியமான அம்சங்களாக நிஞ்சா ஸ்டைலில் புதி கவுல் முன் மற்றும் பின் பக்கத்திலும், எல்இடி ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள், புதிய டிஎஃப்டி வண்ண திரை இன்ஸ்ட்ரூமென்டேஷனுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஸ்போர்ட்டி விண்ட்ஷீல்டு, 3டி இன்டர்வோவன் பாடிஒர்க், ஆகியவையும் 2024 நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்களே அப்டேட்டின் அடிப்படையில் புதிதாக வழங்கப்பட்டவை ஆகும். இதுபோன்று இன்னும் சில அம்சங்களும் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய 4.3 அங்குல டிஎஃப்டி திரை ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதிக் கொண்டதாகும். ஸ்போர்ட், ரோட் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங்களும் புதிதாக இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அதன் பெயருக்கு ஏற்ப தனித்துவமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விரைவில் இன்னும் பல புதுமுக மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகன மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கு தொடக்க புள்ளியாகவே கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கின் வருகை அமைந்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பைக் என்பதால் இதன் விலை ஓர் பிரீமியம் காருக்கு இணையானதாகக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications









