ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்கிற்கு மற்றுமொரு புதிய போட்டியா! ஏற்கனவே இருக்குறது போதாதுனு இது வேறையா!

பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி (Kawasaki), 2024 இசட்650ஆர்எஸ் (Z650RS) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 6.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனம் பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

கவாஸாகி இசட்650ஆர்எஸ் (Kawasaki Z650RS) ஓர் நியோ ரெட்ரோ மிடில் வெயிட் மோட்டார்சைக்கிள் (Neo Retro Middle Weight Motorcycle) ஆகும். இதையே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது கவாஸாகி நிறுவனம். 1970களில் விற்பனைக்குக் கிடைத்த இசட்650-பி1 மாடலையே தற்போது நவீன யுகத்திற்கு ஏற்ப ரெடி செய்து சந்தைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, கவாஸாகி நிறுவனம்.

Kawasaki z650rs

மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு யுக்தியைப் பயன்படுத்தியே இந்த பைக்கை ரெடி செய்திருக்கின்றது, கவாஸாகி. வட்ட வடிவ ஹெட்லைட், குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்கள் பைக்கிற்கான பிளஸ் ஆகும். இத்துடன், ட்வின் பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அடிப்பகுதியில் இருக்கும் எக்சாஸ்ட் என கூடுதல் சிறப்புகளைச் சேர்த்து இந்த பைக்கை இன்னும் அதிக கவர்ச்சியானதாக கவாஸாகி மாற்றி இருக்கின்றது.

இத்துடன், மெல்லிய மற்றும் கிளியரான அமைப்பிலான எல்இடி இன்டிகேட்டர் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் ஹெட்லைட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இது ஓர் 650 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இது ஓர் லிக்யூடு கூல்டு பாரல்லல் ட்வின் மோட்டார் ஆகும். இந்த எஞ்சினால் அதிகபட்சமாக 67 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kawasaki z650rs side design

இந்த அதீத திறன் வெளிப்பாட்டின் போது பைக்கைக் கட்டுப்படுத்துவதற்காக மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. டூயல் பெடல் டிஸ்க் செட்-அப்பே இசட்650ஆர்எஸ் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வழக்கமான ரோட்டார்களையும் இந்த பைக்கில் கவாஸாகி நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

இத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக இந்த பைக்கின் முன் பக்கத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் அட்ஜஸ்டபிள் ப்ரோ-லோடு சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், நவீன ரைடு அனுபவத்தை இந்த பைக்கில் ரைடர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சிறிய எல்சிடி திரை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

Kawasaki z650rs side view

இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்களை தாங்கிய மோட்டார்சைக்கிளாகவே கவாஸாகி இசட்650ஆர்எஸ் உள்ளது. இதனை காவாஸாகி நிறுவனம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் மிக சிறந்த ராயல் என்பீல்டு தயாரிப்பே 650 ட்வின் மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

இதற்கு போட்டியாக கவாஸாகி இந்த பைக்கை விற்பனைக்குக் களமிறக்கி இருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த போட்டியில் ராயல் என்பீல்டு தயாரிப்பை கவாஸாகியின் இந்த புதுமுக மோட்டார்சைக்கிளான இசட்650 ஆர்எஸ் வீழ்த்துமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி இசட்650 ஆர்எஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சில கார்களுக்கே டஃப் கொடுக்கும் அதிக விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. டாடாவின் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடலான பஞ்சைக் காட்டிலும் இதன் விலை அதிகமாக இருப்பது கவனிக்கத்தகுந்தது. டாடா பஞ்ச் இந்தியாவில் ரூ. 6 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 0:14 [IST]
English summary
Kawasaki launched z650rs motorcycle in india here is more details
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X