வருஷம் முடிய போதுனுகூட பாக்கல.. புது பைக்க கொண்டாந்திருக்காங்க.. பிளாட்டினா-ஸ்பிளெண்டரை போல இத வாங்க முடியாது!

2024 ஆம் ஆண்டு முடிய போகுதுனுகூட பாக்காமல பிரபல பைக் உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கவாஸாகி நிறுவனமே அதுவாகும். நிஞ்சா 1100எஸ்எக்ஸ் பைக் மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஆண்டு இறுதியை புதிய வாகன அறிமுகத்துடன் கொண்டாடும் விதமாக அது இந்த பைக் மாடலை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அறிமுக விலையாக ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம் நிஞ்சா 1100எஸ்எக்ஸ்-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பணக்காரர்கள் மட்டுமே நுகரக் கூடிய விலையே இதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காரின் விலை இதுவாகும். இந்த விலையில் இரண்டு ஆல்டோ கார்களின் உயர்நிலை தேர்வையே வாங்கிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

Kawasaki ninja 1100sx side view

ஆகையால், வழக்கமான ஸ்பிளெண்டர், பிளாட்டினாவை போல அடித்தட்டு மக்களால் இந்த பைக்கை வாங்க முடியாது என்பது தெரிய வந்திருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து இப்போது நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்கிற்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளையும் கவாஸாகி நிறுவனம் நாட்டில் தொடங்கி இருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் முன் தொகையிலேயே புக்கிங்கை கவாஸாகி ஏற்று வருகின்றது. மேலும், இதன் டெலிவரி பணிகளை வருகின்ற ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கவும் கவாஸாகி திட்டமிட்டு உள்ளது.

புத்தாண்டை தன்னுடைய வாடிக்கையாளர்கள் புதிய வாகனத்துடன் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கிலேயே இதன் டெலிவரி பணியை ஜனவரில் தொடங்க கவாஸாகி திட்டமிட்டு இருக்கின்றது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பைக்காகவும், சிறப்பம்சங்களை அதிகம் தாங்கிய பைக்காகவும் இதனை கவாஸாகி தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Kawasaki ninja 1100sx launched

எவ்வளவு தூரம் பயணித்தாலும் பெரிய அளவில் களைப்பே தெரியாது. அந்த அளவிற்கே அதிகம் தரம்மிக்க காராக இதனை கவாஸாகி தயார் செய்திருக்கின்றது. உலக சந்தையில் பன்முக வேரியண்டுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்ற சூழலில், தற்போது ஸ்டாண்டர்டு எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றது.

குறிப்பாக, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் பிரெம்போ பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, இந்த பைக்கின் ரைடு அனுபவத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும் விதமாக பன்முக ரைடிங் மோட்கள், டிராக்சன் கன்ட்ரோல், பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 1099 சிசி இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 136 எச்பி மற்றும் 113 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதிக பவர்ஃபுல் எஞ்சின் மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை மிக மிக அதிகமாக உள்ளது.

இந்த பைக் விற்பனைக்கு வந்திருப்பது பல்வேறு பைக் மாடல்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 900 ஜிடி (Triumph Tiger 900 GT) மாடலுக்கு இதன் வரவு மிகப் பெரிய போட்டியான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பணக்காரர்கள் மத்தியில் சொகுசு கார்களுக்கு எப்படி நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றதோ, அதைபோலவே கவாஸாகி நிஞ்சா 1100எஸ்எக்ஸ் மாதிரியான பைக் மாடல்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை உணர்ந்தே இந்த பைக்கை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. விரைவில் அஜித் மாதிரியான பைக் ஆர்வலர்கள் இந்த பைக்கை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2024, 23:30 [IST]
English summary
Kawasaki ninja 1100sx launched in india with improved touring features and pricing
மேலும்... #kawasaki #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+