என்னது இனி இந்த பைக்கை வாங்க முடியாதா!.. இந்தியாவில் இருந்து தூக்கியெறியப்பட்ட கவாஸாகியின் சூப்பரான பைக்!
கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் சூப்பரான பைக் மாடல் ஒன்றை விற்பனையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன பைக் மாடல்? ஏன் விற்பனையில் இருந்து அந்த பைக் வெளியேற்றப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கவாஸாகி. இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்த கவர்ச்சிகரமான இரண்டு சக்கர வாகன மாடல்களில் நிஞ்சா 400 (Kawasaki Ninja 400)-ம் ஒன்றாகும். இதுவே தற்போது நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது.

நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பான நிஞ்சா 500 (Kawasaki Ninja 500) மாடலுக்கு வழி விடும் பொருட்டே கவாஸாகி நிஞ்சா 400 வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக் பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் இருந்தும் இந்த பைக் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், இந்தியாவில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இனி வரும் நாட்களில் கவாஸாகி நிஞ்சா 400 விற்பனைக்குக் கிடைக்காது என்கிற சூழலே தற்போது உருவாகி இருக்கின்றது. நிஞ்சா 400 மிகப் பெரிய சவால்களுக்கு மத்தியிலேயே இந்தியாவில் வேரூன்ற தொடங்கியது. இந்த பைக் நிஞ்சா 300 பைக்கைப் போலில்லாமல், வெளிநாட்டில் இருந்து சிபியூ வாயிலாகவே இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டது.
ஆகையால், இதன் விலை சற்று அதிகமாக இருந்தது. அதேவேளையில், மிக சிறப்பான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பு மற்றும் அதீத திறனை வெளியேற்றும் மோட்டார் ஆகியவற்றின் காரணமாக இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களை இந்த பைக் தன் பக்கம் சுண்டிழுத்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே நிஞ்சா 400 பைக் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு, அது இருந்த இடத்தில் தற்போது நிஞ்சா 500 மாடலால் நிரப்பப்பட்டு உள்ளது. நிஞ்சா 400 பைக்கில் 399 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் லிக்விட் கூல்டு டிஓஎச்சி 8 வால்வுகள் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44.8 எச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் கொண்ட நிஞ்சா 400 பைக்கையே இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து விற்பனையில் இருந்து அகற்றி அதற்கு பதிலாக நிஞ்சா 500 மாடலை விற்பனைக்குக் கொண்டு கவாஸாகி திட்டமிட்டு இருக்கின்றது.
நிஞ்சா 400 விற்கப்பட்ட அதே விலையிலேயே புதிய நிஞ்சா 500 விற்கப்படுகின்றது. இதற்கு 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிஞ்சா 500 பைக்கில் 451 சிசி திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட லிக்விட் கூல்டு பாரல்லல் ட்வின் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதே எஞ்சினே கவாஸாகி எலிமினேட்டரிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 45 பிஎஸ் பவரையும், 42.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் பலதரப்பட்ட பிரீமியம் தர அம்சங்களை கவாஸாகி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், இலகு எடைக் கொண்ட டிரெல்லிஸ் ஃப்ரேம், ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி என ஏகப்பட்ட சிறப்புகளை நிஞ்சா 500 தனக்குள் தாங்கி இருக்கின்றது. இதுபோன்ற அதிக அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிரீமியம் மற்றும் அதிக திறனை வெளியேற்றும் பைக்குகளை விரும்புவோர் மத்தியிலேயே கவாஸாகி நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் நிலவிக் கொண்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








