நிஞ்சா 400 விலையில் நிஞ்சா 500 பைக்கா!! கவாஸாகி இப்படி இறங்கி வருவதற்கு காரணம் என்ன தெரியுமா?

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் நிஞ்சா 500 (Ninja 500) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். முக்கியமாக இந்த பைக் நிஞ்சா 400 (Kawasaki Ninja 500) பைக்கை விற்பனையில் இருந்து வெளியேற்றும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான நிஞ்சா 500 (Ninja 500) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 5.24 லட்சத்தை அது நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Kawasaki ninja 500

நிஞ்சா 400 மாடலுக்கு இணையான விலையிலேயே இந்த பைக் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. நிஞ்சா 400 தற்போது ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய நிஞ்சா 400 பைக்கின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிஞ்சா 500 பைக்கின் டெலிவரி இம்மாத இறுதிக்குள்ளேயே தொடங்கிவிடும் என்றே இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஞ்சா 400 பைக்கை ரீ-பிளேஸ் செய்யும் நோக்கிலேயே நிஞ்சா 500 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது நிஞ்சா 400 பைக்கிற்கு தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கின்றது.

Kawasaki ninja 500 engine

இருக்கும் ஸ்டாக்கை முழுமையாக விற்று வெளேயேற்ற வேண்டும் என்கிற நோக்கிலேயே இதற்கு ரூ. 40 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 451 சிசி லிக்யூடு கூல்டு, பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 45 பிஎச்பி பவரை 9,000 ஆர்பிஎம்மிலும், 42.6 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதே எஞ்சினே கவாஸாகி எலிமினேட்டர் 500 க்ரூஸர் மற்றும் நிஞ்சா 7 ஹைபிரிட் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் வருகை அப்ரில்லா ஆர்எஸ் 457 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 ஆகியவற்றிற்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kawasaki ninja 500 front look

இந்த மோட்டார்சைக்கிளில் டூயல் சேனல் ஏபிஎஸ், பெரிய விண்ட்ஷீல்டு, யுஎஸ்பி-சி அவுட்லெட், டேங்க் பேக், டேங்க் பேட், க்னீ பேட், ரேடியேட்டர் ஸ்கிரீன், ஃப்ரேம் ஸ்லைடர்கள், பில்லியன் சீட் கவர், வீல் ரிம் டேப், ஹெல்மெட் லாக் மற்றும் யு-டாக் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் ஆகியவையும் இந்த பைக்கை அலங்கரிக்கும் விதமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், நவீன வசதியை வழங்கும் பொருட்டு எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் இருக்கை பலமடங்கு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Kawasaki ninja 500 side look

மிக சிறந்த பேலன்ஸ் மற்றும் கம்ஃபோர்ட்டான ரைடு அனுபவம் ஆகியவை வழங்கும் பொருட்டு இந்த இருக்கை தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், லாங் ரைடு செய்ய மிக சிறந்த பைக்காக கவாஸாகி நிஞ்சா500 இருக்கின்றது. இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிஞ்சா 500 பைக்கிற்கு புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இம்மாத இறுதிக்குள் இதன் டெலிவரி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பணிகள் தொடங்கிய பின்னர் யமஹா ஆர்3, அப்ரில்லா ஆர்எஸ் 457 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 ஆகியவற்றிற்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 16:19 [IST]
English summary
Kawasaki ninja 500 launched here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X