விலையை சொல்வதற்கு முன்னே புக்கிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!! ரூ.5,000 இருந்தால் போதும்!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் புதிய 230சிசி அட்வென்ச்சர் பைக்கிற்கு முன்பதிவுகளை இந்தியாவில் துவங்கியுள்ளது. பைக்கிற்கான முன்பதிவுகள் ரூ.5,000 முன்தொகை உடன் துவங்கப்பட்டுள்ளன. ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200 4வி அட்வென்ச்சர் பைக்கிற்கு போட்டியாக இந்த பைக் சந்தையில் களமிறக்கப்பட உள்ளது. கே.எல்.எக்ஸ்230 (KLX 230) என பெயரிடப்பட்ட இந்த புதிய கவாஸாகி பைக், அதிகாரப்பூர்வ எக்ஸ்-ஷோரூம் விலைகள் உடன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தாய்லாந்து, இந்தோனிஷிய நாடுகளை போலவே அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இந்தியாவிலும் ஒரு கிரேஸ் உள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டது ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். தெரிந்து செய்ததோ அல்லது எதர்சையாக நடந்ததோ ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு இந்த பைக்கின் அதிகரித்துவரும் விற்பனை எண்ணிக்கை தான் சாட்சியாகும்.

kawasaki opened bookings for klx230

இதனை பார்த்த நம்பிக்கையில் தான் கவாஸாகி அதன் புதிய கே.எல்.எக்ஸ்230 பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை காட்டிலும் கே.எல்.எக்ஸ்230 பைக் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மேலும் ஏற்றதாக விளங்குகிறது. இத்தகைய கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 பைக்கிற்கு தான் தற்போது இந்தியாவில் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

விலைகள் அறிவிக்கப்பட்டு பைக் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே துவங்கப்பட்டுள்ள இந்த முன்பதிவின் மூலம் கே.எல்.எக்ஸ்230 பைக்கை வெறும் ரூ.5,000இல் புக் செய்துக் கொள்ளலாம். பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முழு தொகையை செலுத்தி பைக்கை டெலிவிரி எடுத்துக் கொள்ளலாம். இந்த பைக்கின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மிகவும் குறைவான பாடி பேனல்கள் உடன் பைக் மெல்லியதான தோற்றத்தில் உள்ளது.

kawasaki opened bookings for klx230

ஆஃப்-ரோடு பைக்குகளுக்கே உண்டானது போல் முன்பக்க மட்கார்ட் டயரில் இருந்து உயரமாக கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் டிராவல் மிகவும் நீளமானதாக உள்ளது. மட்கார்டுக்கும், டயருக்கும் இடையே ஃபோர்க் கெய்டர்ஸ் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. இதனால், புதிய கே.எல்.எக்ஸ்230 பைக்கில் கரடு முரடான பாதைகளிலும் குதித்து செல்ல முடியும்.

சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் 240மிமீ டிராவல் உடன் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 250மிமீ டிராவல் உடன் ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட் வசதி கொண்ட யுனி-ட்ராக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதி வலிமை கொண்ட இரும்பிலான பெரிமீட்டர் ஃப்ரேமில் இந்த கவாஸாகி பைக் உருவாக்கப்படுகிறது. இதன் மூலமாக சவாலான பயணங்களை சமாளிக்கக்கூடியதாக கே.எல்.எக்ஸ்230 பைக் விளங்குகிறது.

kawasaki opened bookings for klx230

மேலும், ஹேண்ட்லிங் மற்றும் பேலன்ஸும் சிறப்பாக உள்ளதாக இந்த பைக்கை ஓட்டி பார்த்தவர்கள் கூறுகின்றனர். எந்தவொரு ரைடரும் ஓட்டுவதற்கு ஏற்ற சேசிஸில் கே.எல்.எக்ஸ்230 பைக்கை உருவாக்கியுள்ளதாக கூறும் கவாஸாகி, இந்த பைக்கில் பிரேக்கிற்கு முன்பக்கத்தில் 265மிமீ பெடல் டிஸ்க்கையும், பின்பக்கத்தில் 220மிமீ பெடல் டிஸ்க்கையும் வழங்கியுள்ளது. இவை இல்லாமல், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ளும் போது ஏபிஎஸ்-ஐ அணைத்து வைப்பதற்கான ஸ்விட்ச் ஹேண்டில்பாரின் இடதுப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்படும் 233சிசி, ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 18.1 பிஎஸ் மற்றும் 18.3 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 139 கிலோ எடை கொண்ட இந்த அட்வென்ச்சர் பைக்கில் ஓட்டுனர் இருக்கை தரையில் இருந்து 88 செ.மீ உயரத்தில் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வென்ச்சர் பைக்குகளை கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் கடினம் என்கிற பார்வை பரவலாக மக்களிடத்தில் உள்ளது. குறைவான எடையிலான கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 பைக் ஹேண்டில் செய்வதற்கு எளியதாக இருக்கும். இருப்பினும், விலை ரூ.2 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம் என பேச்சுக்கள் எழுவதால், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் போட்டியை இந்த புதிய கவாஸாகி பைக்கால் எதிர்கொள்ள முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 20, 2024, 18:09 [IST]
English summary
Kawasaki opened bookings for klx230 bike in india check all details here
மேலும்... #kawasaki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X