பெட்ரோல்-மின்சாரம் 2-லும் ஓடும் டூ-வீலருக்கு பேடண்ட் பதிவை பெற்ற கவாஸாகி.. பெட்ரோல் பைக் இனி சேலான மாதிரிதான்!

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி, இரண்டு தரமான இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் பேடண்ட் பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் என்ன? அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

உலகின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கவாஸாகி-யும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் இரண்டு புதுமுக பைக்குகளுக்கான பேடண்ட் பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிஞ்சா 7 ஹைபிரிட் மற்றும் இசட் இ-1, இந்த இரண்டு டூ-வீலர்களுக்கே அது பேடண்ட் பதிவை இந்தியாவில் செய்திருக்கின்றது.

Kawasaki ninja 7 hybrid and z e-1

இதில் நிஞ்சா 7 ஹைபிரிட் என்பது பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் ஓடும் பைக் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இசட் இ-1 என்பது முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் பைக்காகும். இந்த எலெக்ட்ரிக் பைக்கே கவாஸாகி உற்பத்தி செய்ய தொடங்கிய முதல் எலெக்ட்ரிக் பைக்காகும்.

இந்த இரண்டையே இந்தியா கொண்டு வரும் விதமாக கவாஸாகி நிறுவனம் பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது. கவாஸாகி நிறுவனத்தை பொருத்த வரை அது ஓர் தயாரிப்பிற்கு பேடண்ட் பதிவைப் பெறுகிறது என்றால் கட்டாயம் அந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kawasaki ninja 7 hybrid

மற்ற நிறுவனங்களைப் போல ஆய்வுக்கு பணிக்காக மட்டுமே அது பேடண்ட் பதிவைப் பெறுவதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது. எனவே கவாஸாகியின் இந்த இரண்டு தயாரிப்புகளும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. நிஞ்சா 500 பைக்கை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே நிஞ்சா 7 ஹைபிரிட்டையும் கவாஸாகி நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

மேலும், பாரல்லட் ட்வின் சிலிண்டர் டிஓஎச்சி 4வி லிக்யூடு கூல்டு மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 44.7 பிஎச்பி பவரையும், 42.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, கூடுதலாக ஓர் எலெக்ட்ரிக் மோட்டாரும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kawasaki z e-1

இதுவே, மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்டதாக இந்த பைக்கை மாற்றி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 60 பிஎச்பி பவரை வெளியேற்றும். இதற்கு மின்சாரத்தை வழங்கும் விதமாக சிறிய பேட்டரி பேக் ஒன்றும் நிஞ்சா 7 ஹைபிரிட் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், மற்ற நிஞ்சா பைக்குகளைப் போல் இல்லாமல், இதன் இடது பக்க சுவிட்ச் கியரில் மிகவும் அதிநவீன ஷிஃப்ட் பேடில்கள் வழங்கப்பட்டு இருக்கும். இதுமாதிரியான கூடுதல் சிறப்பு வசதிகள் காரணமாக, குறிப்பாக, பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருப்பதால் வழக்கமான நிஞ்சா பைக்குகளைக் காட்டிலும் அதிக எடைக் கொண்டதாக நிஞ்சா 7 ஹைபிரிட் மாறி இருக்கின்றது.

இதன் ஒட்டுமொத்த எடை 227 கிலோவாகும். உலக சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த பைக் இசட்எக்ஸ்-6ஆர் மாடலைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக விற்கப்படுகின்றது. ஆகையால், இந்த ஹைபிரிட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ஓர் சொகுசு காரின் விலைக்கு இணையானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே நிஞ்சா 7 ஹைபிரிட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகி இசட் இ-1 பைக்கின் சிறப்புகள்: ஏற்கனவே கூறியதைப் போல முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் பைக் மாடலே இதுவாகும். கழட்டி மாட்டும் பேட்டரி வசதியுடனேயே இந்த பைக் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில் இரண்டு பேட்டரி பேக்குகளை இதில் பொருத்திக் கொள்ள முடியும் ஒவ்வொன்றும் 1.5 kWh திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த 3 kWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 70 கிமீ முதல் 100 கிமீ வரையில் ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். இதன் விலையும் சற்று காஸ்ட்லியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. நிஞ்சா 650 மாடலைக் காட்டிலும் அதிக விலையையே இது கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி பேடண்ட் பதிவைச் செய்திருக்கும் இந்த இரண்டு பைக்குகளும் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய துள்ளியமான வார்த்தைகள் எதுவும் கவாஸாகி இடமிருந்து இதுவரை வெளியாகவில்லை. இது விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் சிஎன்ஜி பைக்குகளைக் காட்டிலும் மிக சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2024, 17:43 [IST]
English summary
Kawasaki patents ninja 7 hybrid bike and z e 1 e bike in india here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X