கவாஸாகியோட இந்த பைக்குகள் மட்டும் விற்பனைக்கு வந்துச்சு.. ஹோண்டா, ஹீரோ எல்லாரோட சாம்ராஜ்யமும் குளோஸ்!

உலகின் முன்னணி பைக் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கவாஸாகி (Kawasaki), ஹைபிரிட் வகை பைக் மாடல் (Hybrid Bike Model)-களை தயாரிக்கும் பணியில் வெகு நாட்களாகவே ஈடுபட்டு வருகின்றது. நிறுவனம் ஏற்கனவே இரண்டு ஹைபிரிட் பைக் மாடல்களை வெளியீடு செய்திருக்கின்றது. நிஞ்சா 7 ஹைபிரிட் (Ninja 7 Hybrid) மற்றும் இசட்7 ஹைபிரிட் (Z7 Hybrid) பைக் மாடல்கள்தான். ஆனால், இவற்றின் உற்பத்தி பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. இந்த நிலையிலேயே மேலும் இரண்டு புதிய பைக் மாடல்களிலும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்கும் பணியில் கவாஸாகி ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிஇ (எரிபொருளில் இயங்கும் எந்திரம்) மற்றும் மின்சார மோட்டார் இந்த இரண்டையும் கொண்டிருக்கும் வாகனமே ஹைபிரிட் வாகனம் ஆகும். இந்த அம்சத்தையே தற்போது புதிதாக எலிமினேட்டர் மற்றும் வெர்சிஸ் ஆகிய பைக் மாடல்களில் வழங்கும் பணியில் கவாஸாகி களமிறங்கி இருக்கின்றது. சைக்கிள் வேர்ல்டு தளமும் தன்னுடைய சமீபத்தில் வெளியீட்டில் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

Kawasaki expands hybrid bike technology

படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. காப்புரிமை விண்ணப்பங்கள் புதிய திட்டங்களை வெளிப்படுத்துகின்றன: கவாஸாகியின் சமீபத்திய காப்புரிமை விண்ணப்பங்களும், வெர்சிஸ் மற்றும் எலிமினேட்டர் பைக் மாடல்களில் கவாஸாகி ஹைபிரிட் அம்சத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இதுதவிர, காப்புரிமை விண்ணப்பங்கள் வாயிலாக, பைக்கில் இரண்டு பவர் ட்ரெய்ன்களும் (பெட்ரோல் மோட்டார் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்) எப்படி இடம் பெற இருக்கின்றன என்பதை விளக்கும் வகையிலும் உள்ளன.

ஓர் பைக்கில் ஹைபிரிட் அம்சத்திற்கான வசதிகளை சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த சிக்கலான பணியிலேயே கவாஸாகி ஈடுபட்டு உள்ளது. அது என்ன மாதிரியான சிக்கலான பணி என்பதையே காப்புரிமை ஆவணங்களும் நமக்கு தெரியப்படுத்துகின்றன. வெர்சிஸ் மற்றும் எலிமினேட்டர் இந்த இரண்டு பைக்குகளின் வடிவங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு ஹைபிரிட் சிஸ்டத்தை பலமடங்கு கவாஸாகி மேம்படுத்தி இருக்கின்றது. எனவே அது எக்ஸ்ட்ராவாக வெளியில் நீட்டிக் கொண்டோ, அசிங்கமாகவோ வெளியில் தெரியாது.

தற்போதைய ஹைபிரிட் பைக் மாடல்கள்: நிஞ்ஜா 7 ஹைப்ரிட் மற்றும் இசட்7 ஹைப்ரிட் ஆகியவற்றில், ஹைபிரிட் அம்சத்திற்கான முக்கிய பாகங்கள் ரைடர் இருக்கையின் கீழ் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கின்றன. பிரத்யேக மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பேக் போன்ற முக்கிய கூறுகளே கூடுதலாக இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவை, எரிபொருள் தொட்டி மற்றும் எஞ்சினுக்கு அருகாமையிலும் இடம் பெற்றிருக்கின்றன.

வெர்சிஸ் மற்றும் எலிமினேட்டருக்கான புதிய லேஅவுட்: வெர்சிஸ் மற்றும் எலிமினேட்டர் மாடல்களுக்கு, கவாஸாகி அதே 451சிசி பேரலல்-ட்வின் எஞ்சினையேப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்துடனேயே ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட இருக்கின்றது. இதைக் கட்டுப்படுத்தவும் கன்ட்ரோல்கள் இந்த பைக்குகளில் வழங்கப்பட இருக்கின்றன. இதை காப்புரிமைக்கான விண்ணப்பம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து பைக்கை 700 சிசி பைக்கிற்கு சமமான செயல்திறனை வெளியேற்றும் செய்யும் என்பது கவனிக்கத்தகுந்தது. 69 எச்பி திறன் வரை இது வெளியேற்றும்.

இந்த புதிய மாடல்களில், பேட்டரி இருக்கைக்கு அடியில் இருந்து எஞ்சினின் சிலிண்டர் ஹெட்க்கு மேலே நகர்த்தப்பட்டு உள்ளது. அதன் பின்னால் ஏர்பாக்ஸ் இருக்கும். இது வாகனத்தை குளிர்விக்க உதவும். மிகவும் வழக்கமான ஸ்டைலில் பைக்குகள் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று இன்னும் பல மாற்றங்கள் ஹைபிரிட் வாகனமாக எலிமினேட்டர் மற்றும் வெர்சிஸ் ஆகியவற்றை மாற்றும் நோக்கில் கவாஸாகி செய்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி கார்களே அதிகளவில் ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த அம்சம் கொண்ட வாகனங்கள் அனைத்தும் வழக்கமான அளவைக் காட்டிலும் 20சதவீதம் முதல் 30சதவீதத்திற்கும் அதிகமாக மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே கவாஸாகி ஹைபிரிட் பைக்குகளும் மிக சிறந்த மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 5:00 [IST]
English summary
Kawasaki to introduce new hybrid bike models with advanced features
மேலும்... #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+