இந்தியர்களின் மனதை மட்டுமல்ல சிறப்பான விருதையும் வென்ற லூனா.. இந்த விருதையே அள்ளி கொடுத்துட்டாங்களா!!

இந்தியர்களின் பிரியமான இரண்டு சக்கர வாகன மாடல்களில் ஒன்றான லூனா (Luna), இந்தியாவில் சமீபத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று விற்பனைக்கு அறிமுகமானது. கடந்த முறை போன்று எரிபொருளில் இயங்கும் எஞ்சினைக் கொண்ட வாகனமாக அல்லாமல் இம்முறை மின்சார அவதாரத்தில் அந்த வாகனம் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்களின் மனம் கவர்ந்த இந்த வாகனம் தற்போது கைனெடிக் கிரீன் (Kinetic Green) பிராண்டின்கீழ் இ-லூனா (E Luna) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கே மிக சிறந்து விருது வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் புனேவில், 'இ-மொபிலிட்டி பிளஸ் ஸ்டேட் லீடர்ஷிப் விருதுகள் மஹாராஷ்டிரா 2024' (EMOBILITY+ State Leadership Awards Maharashtra 2024) நிகழ்வு நடைபெற்றது.

Kinetic green e luna

இந்த நிகழ்விலேயே கைனெடிக் இ-லூனாவிற்கு 'சிறந்த மின்சார வாகன மாடல்' (Best Electric Vehicle Model) எனும் விருது வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த விருதுகள், மின்சார வாகன பிரிவில் புரட்சியை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், கௌரவிக்கும் வகையிலும் வழங்கப்படுகின்றது.

இ-லூனா மலிவு விலையில் பலரும் வாங்கி பயனடையும் விற்பனைக்கு வந்திருப்பதனாலும், சுற்றுச் சூழலை காக்கும் வகையில் அதன் பயன்பாடு இருப்பதாலும் அதற்கு சிறந்த மின்சார வாகன மாடல் என்கிற விருது வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிக சமீபத்திலேயே இ-லூனா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டு விதமான தேர்வுகளில் அது தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ-லூனா எக்ஸ்1 (E Luna X1) மற்றும் இ-லூனா எக்ஸ்2 (E Luna X2) என்பதே அது ஆகும். இதில் ஆரம்ப நிலை தேர்வாக இ-லூனா எக்ஸ்1 இருக்கின்றது. இதற்கு ரூ. 69,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஓர் முழு சார்ஜில் இ-லூனா எக்ஸ்1 தேர்வு 90 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 1.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதுமானது.

அதேவேளையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ ஆகும். கொஞ்சம் காஸ்ட்லியான தேர்வாக இ-லூனா எக்ஸ்2 காட்சியளிக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 2 kWh பேட்டரி பேக் இ-லூனா எக்ஸ்2 தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த பெரிய பேட்டரி பேக்கே இ-லூனா எக்ஸ்2-வை காஸ்ட்லியான தேர்வாக மாற்றி இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீட்டரே ஆகும். அதேவேளையில், இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். இ-லூனா ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அவை, மல்பெரி ரெட் (Mulberry Red), ஓசோன் ப்ளூ (Ocean Blue), பியர்ல் யெல்லோ (Pearl Yellow), ஸ்பார்க்ளிங் கிரீன் (Sparkling Green) மற்றும் நைட் ஸ்டார் பிளாக் (Night Star Black) ஆகியவையே அவை ஆகும். இதுபோல், பலதரப்பட்ட சிறப்பம்சங்களையும் இந்த வாகனம் தனக்குள் தாங்கி இருக்கின்றது.

அந்தவகையில், முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், புடவை வாகனத்தில் சிக்காமல் இருக்க குவார்டு, சைடு ஸ்டாண்டு சென்சார், பிரேக்கை லாச் செய்யும் வசதி, பெரிய லக்கேஜ் வைப்பதற்கான இட வசதி, முரட்டுத் தனமான ஸ்டீல் சேஸிஸ், அதிக வெளிச்சத்தை வழங்கும் ஹெட்லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், கால் தொடைக்கான குவார்டு, டிஜிட்டல் மீட்டர், கை பிடி, கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பின் இருக்கை, காம்பி பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான பலதரப்பட்ட வசதிகளை இதில் கொடுத்திருக்கின்ற காரணத்தினாலேயே அந்த வாகனத்திற்கு மிக சிறந்த விருது வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவாக விற்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இ-லூனாவும் ஒன்றாகும். இது ஓர் மொபட் வகை எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். ரூ. 500 முன் தொகையில் இந்த வாகனத்திற்கான முன் பதிவுகளை இ-லூனா விற்பனையாளர்கள் ஏற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2024, 19:50 [IST]
English summary
Kinetic e luna bags best electric vehicle model award here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+