யாருமே எதிர்பாக்கல! திடீரென விற்பனைக்கு வந்தது கைனடிக் லூனா! விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக்கிங் பண்ணீருவீங்க!

இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த மொபட்களில் ஒன்று கைனடிக் லூனா (Kinetic Luna). அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு, இந்திய மக்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு வாகனமாக இது இருந்தது. ஆனால் கால மாற்றத்தில், கைனடிக் லூனா இந்திய சாலைகளில் இருந்து விடைபெற்று விட்டது.

எனினும் இந்திய மக்களின் மனதை விட்டு, கைனடிக் லூனா இன்னும் அகலவில்லை. எனவே கைனடிக் லூனா மொபட்டை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர கைனடிக் க்ரீன் (Kinetic Green) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்பு போல் அல்லாமல், கைனடிக் லூனா இம்முறை எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

Kinetic E-Luna

கைனடிக் இ-லூனா (Kinetic E-Luna) என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் மொபட், கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக குடியரசு தினத்தை (Republic Day) முன்னிட்டு, நாளையில் இருந்து (ஜனவரி 26) கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அமேசான் (Amazon) உள்ளிட்ட ஒரு சில இ-காமர்ஸ் இணையதளங்களில் (E-commerce Websites) கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட் தற்போது விற்பனைக்கு பட்டியலிட்டிருப்பது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. இதன்படி பார்த்தால் கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டின் ஆரம்ப விலை வெறும் 71,990 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.

Kinetic E-Luna Front Design

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 74,990 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டில், 2 kWh லித்தியம்-அயான் பேட்டரி (Lithium-ion Battery) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ரேஞ்ச் (Range) 110 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான், ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 4 மணி நேரம் வரை ஆகலாம் என தெரிகிறது.

அதே நேரத்தில் கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டின் எடை 96 கிலோ என்ற அளவிலும், டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவல்கள், கைனடிக் இ-லூனா எலெக்ட்ரிக் மொபட்டின் வருகைக்காக காத்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் இங்கே கூறியுள்ளபடியான விலை மற்றும் பேட்டரி திறனுடன்தான், கைனடிக் இ-லூனா விற்பனைக்கு வரும் என கருதுகிறோம். எனினும் கைனடிக் க்ரீன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இந்த தகவல்கள் எதுவும் இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனவே கைனடிக் க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருப்பது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 25, 2024, 18:30 [IST]
English summary
Kinetic e luna details leaked price battery range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+