சமீபத்தில் விற்பனைக்கு வந்த இ-லூனாவின் சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு தெரியுமா? என்னது இவ்ளோ சீப்பா கிடைக்குதா!!
கைனெட்டிக் கிரீன் (Kinetic Green) நிறுவனம் இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான இ-லூனா (e-Luna)வை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாரும் எதிர்பார்த்திராத மலிவு விலையையே இந்த எலெக்ட்ரிக் மொபட்டிற்கு அது நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ. 69,990 - ரூ. 75 ஆயிரம் ஆகிய விலையிலேயே இ-லூனா விற்பனைக்குக் கிடைக்கும்.
இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex Show Price) மட்டுமே ஆகும். "இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைதானா, அப்போ ஆன்-ரோடில் (On Road) இதன் விலை எவ்வளவு இருக்கும்" இதுவே நம்மில் பலருக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தேகமாக தற்போது மாறி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே சென்னை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அந்த நகரங்களின் கைனெட்டிக் லூனாவின் ஆன்-ரோடு விலை எவ்வளவு என்கிற விபரத்தையே இந்த பதிவில் வெளியிட்டு இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். கைனெட்டில் லூனா இந்தியாவில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
எக்ஸ்1 மற்றும் எக்ஸ்2 ஆகியவையே அவை ஆகும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் லூனாவின் எக்ஸ்1 ரூ. 78,674க்கும், எக்ஸ்2 ரூ. 83,856க்கும் விற்கப்படுகின்றது. இதேபோல், நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் ரூ. 77,874 மற்றும் 83,056 ரூபாய்க்கும் இ-லூனா விற்கப்படுகின்றது.
அடுத்தபடியாக ஹைதராபாத்தில் ரூ. 78,474 - ரூ. 83,656க்கும், மும்பையில் ரூ. 77,374 - ரூ. 82,556க்கும், கொல்கத்தாவில் ரூ. 84,174 - ரூ. 89,356க்கும் மற்றும் டெல்லியில் ரூ. 78,174 - ரூ. 83,356க்கும் கைனெட்டிக் இ-லூனா விற்கப்படுகின்றது. இந்த விலைகள் அனைத்தும் மேலே குறிப்பிட்டதைப் போல ஆன்-ரோடு விலைகள் மட்டுமே ஆகும்.
ஒருவேளை கூடுதலாக அக்சஸெரீஸ்களை நீங்கள் வாங்க நேரிட்டால் இதைவிட கொஞ்சம் அதிக விலையை அவைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் இருப்பதிலேயே கொல்கத்தாவிலேயே மிக அதிக விலையில் இ-லூனா விற்கப்படுகின்றது. இந்தியாவின் மற்ற நகரங்களில் இ-லூனா ரூ. 78 ஆயிரத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் விற்கப்படும் நிலையில் அங்கு மட்டும் ஆரம்ப விலையே ரூ. 84 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கின்றது.
இருப்பதிலேயே விலை குறைவாக மஹாராஷ்டிராவின் மும்பை, நவி மும்பை மற்றும் புனேவிலேயே கைனெட்டிக் இ-லூனா விற்கப்படுகின்றது. இங்கு ஆரம்ப விலை ஏற்கனவே கூறியதைப் போல் ரூ. 77,374 ஆகும். இ-லூனா எக்ஸ்1 ஓர் முழு சார்ஜில் 90 கிலோ மீட்டர் ரேஞ்ஜையும், எக்ஸ்2 ஓர் முழு சார்ஜில் 110 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மொபட்டில் 1.2 kW மோட்டார் மற்றும் 2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர் ஆகும். இந்தியாவின் நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்க இதுவே போதுமான வேகம் ஆகும்.
இதுதவிர இந்த வாகனத்தில் இன்னும் பல சிறப்பம்சங்களை கைனெட்டிக் கிரீன் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக தனி நபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி சரக்குகளை அதிகம் ஏற்றிச் செல்லக் கூடிய வாகனமாகவும் இதனை கைனெட்டிக் தயார் செய்திருக்கின்றது. இதற்காக பின் இருக்கையை கழட்டிக் கொள்ளும் வசதியை அது வழங்கி இருக்கின்றது.
இருக்கையை கழட்டிக் கொள்வதன் வாயிலாக அங்கு சரக்குகளை ஏற்றிக் கொள்ள முடியும். இதுதவிர, முன் பக்கத்திலும் சரக்குகளை ஏற்றிக் கொள்ள முடியும். மேலும், ரைடர் இருக்கைக்கு அடியிலும் சிறிய ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பெரிய டிஜிட்டல் திரை, ஸ்போக் ஒயர்வீல் மற்றும் எல்இடி ஹெட்லைட் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கைனெட்டிக் இ-லூனா எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்குக் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








