பால் வியாபாரம், காய்கறி வியாபாரம் செய்ய ரொம்ப கம்மி ரேட்ல இவி வந்துடுச்சு!

கோமகி நிறுவனம் இந்தியாவில் கேட் 2.0 என் எக்ஸ் டி என்ற எலக்ட்ரிக் மொபட்டை ரூ99,500 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிவரி தொழிலில் இருக்கும் பலர் லாஸ்ட் மைல் டெலிவரிக்காக இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும். இந்த வாகனத்தின் ரேஞ்ச், பேட்டரி மற்றும் அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கோமகி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது கேட் 2.0 என்எக்ஸ்டி என்ற எலெக்ட்ரிக் மொபட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மொபட் ரூ 99,500 என்ற ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

Komaki Cat 2 0 NXT

இந்த எலெக்ட்ரிக் மொபட் லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வாங்கினால் ரூபாய் 5000 வரை கேஷ் பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது உடனே வாங்கினால் லாபம் தான்.

இதன் பேட்டரியை பொறுத்தவரை 42 ஆம்ஸ் லித்தியம் பிஓ4 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது மூலம் இந்த எலெக்ட்ரிக் மோட்டாரை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 முதல் 140 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த எலெக்ட்ரிக் மொபட் அதிகபட்சமாக 79 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Komaki Cat 2 0 NXT

இந்த எலெக்ட்ரிக் மொபட்டை உருவாக்கும் போது இரும்பு ஃபிரேம் கொண்டு உருவாக்கியுள்ளார்கள். இதில் கன்வெர்ட்டர் சீட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மொபட் 350 கிலோ எடை கொண்ட சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் இட வசதியும் எடை தாங்கும் அளவிற்கு வாகனத்தின் கட்டமைப்பும் இருக்கிறது. இதன் காரணமாக கொரியர். பால் விற்பனை. பேப்பர் விநியோகம் உள்ளிட்ட லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் இருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கோமகி கேட் 2.0 என்எக்ஸ்டி எலெக்ட்ரிக் மொபட்டின் சார்ஜரை பொறுத்தவரை போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் மொபட்டை சார்ஜ் செய்தால் நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் முழு பேட்டரியும் சார்ஜ் ஏறிவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த வாகனத்தில் ஏகப்பட்ட அட்வான்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Komaki Cat 2 0 NXT

இந்த எலெக்ட்ரிக் மொபட்டில் முன் பக்கம் எல்இடி லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மோட்டாரை பொருத்தவரை பிஎல்டிசி மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பார்க்க அசிஸ்ட், ரிவர்ஸ் அசிஸ்ட், டூயல் டிஸ்க் பிரேக் சிஸ்டம், ஆறு ஹைட்ராலிக் கொண்ட பின்பக்க சஸ்பென்ஷன், உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க சஸ்பென்ஷன் அதிகமாக வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கியமான காரணம் அதிக எடையை இந்த வாகனத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக தான்.

இதுபோக முக்கிய அம்சங்களாக பின்பக்க பேக் ரெஸ்ட்டை மடித்து வைப்பது, கூடுதலான ஸ்டோரேஜ் வசதி வழங்குவது, பாதுகாப்பு கார்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் அப்டேட், யூஎஸ்பி சார்ஜர், பெரிய அகலமான பூட் ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வாகனத்தை வாங்குபவர்களுக்கு ஏகப்பட்ட லாபம் இருக்கிறது.

தெரு தெருவாக சென்று வியாபாரம் செய்யும் பலர் தற்போது பெட்ரேல் செலவு அதிகமாக செய்து டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற மொபட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் இந்த கோமகி கேட் 2.0 என்எக்ஸ்டி மொபட்டை வாங்கினால் அவர்களுக்கான பெட்ரோல் செலவு நிச்சயம் குறையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த வாகனம் மிகப்பெரிய உதவியாக இருக்கும். முக்கியமாக கிராமப்புறங்களில் வாகனத்தில் பொருட்களை எடுத்துச் சென்று வீதி வீதியாக விற்பனை செய்பவர்களுக்கு இந்த வாகனம் குறைந்த செலவில் வாகனத்தை இயக்கும் ஆப்ஷனை வழங்கி அவர்களது செலவை குறைக்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 15:49 [IST]
English summary
Komaki cat 2 0 nxt electric moped launch at 99500 full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X