சிங்கிள் சார்ஜில் 100 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! உண்டியல் பணத்தை வெச்சே வாங்கீரலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்று கோமகி (Komaki). இந்த நிறுவனம் ஃப்ளோரா (Flora) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) விற்பனை செய்து வந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விற்பனைக்கு (Relaunch) களமிறக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேமாகி ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெறும் 69 ஆயிரம் ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோமகி ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருப்பது, லித்தியம் அயான் ஃபெர்ரோ பாஸ்பேட் பேட்டரி ஆகும்.

Komaki Flora Electric Scooter

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 85-100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருப்பது கழற்றி மாட்ட கூடிய வகையிலான பேட்டரி ஆகும்.

எனவே இதனை சார்ஜ் செய்வது எளிமையாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகளையும், அப்டேட் செய்யப்பட்ட ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கோமகி நிறுவனம் வழங்கியுள்ளது.

Komaki Flora Electric Scooter Side Design

ஜெட் பிளாக், கார்னெட் ரெட், ஸ்டீல் க்ரே, சாக்ராமெண்ட்டே க்ரீன் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில், கோமகி ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோமகி ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு 4-5 மணி நேரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. குறிப்பாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் மட்டுமல்லாது, டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ஏத்தர் எனர்ஜி (Ather Energy) போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் டூவீலர்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ளன. இதில், ஏத்தர் நிறுவனத்தை பொறுத்தவரையில் அடுத்ததாக ரிஸ்டா (Ather Rizta) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

அனேகமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி (April 6), இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் முன்பெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைவான ஆப்ஷன்களே இருந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. எதை தேர்வு செய்வது? என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. எனவே எதிர்காலத்தில் இந்திய சாலைகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் நிரம்பியிருக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 14:02 [IST]
English summary
Komaki flora electric scooter relaunched in india all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+