ரிப்பேர் ஆனா அதுவே சரி பண்ணிக்கும்! இவ்ளோ கம்மியான விலையில் 150 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! எப்புட்றா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்று கோமகி (Komaki). வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கோமகி நிறுவனம் தற்போது 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை கோமகி எக்ஸ்-ஒன் ப்ரைம் (Komaki X-ONE Prime) மற்றும் கோமகி எக்ஸ்-ஒன் ஏஸ் (Komaki X-ONE Ace) ஆகியவை ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கோமகி நிறுவனத்தின் 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 2-2.2 kWh லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகளை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர் முதல் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேஞ்ச் (Range), நகர பகுதிகளில் தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும். கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம், இந்த 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் ஆட்டோ ரிப்பேர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஏதாவது பிரச்னை இருந்தால், தங்களை தாங்களே சோதனை செய்து கொண்டு, பிரச்னைகளை சரி செய்து விடும். எனவே நடுவழியில் 'பிரேக் டவுன்' ஆகி தவிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இவை எல்லாம் தவிர, பார்க்கிங் அஸிஸ்ட், ரிவர்ஸ் அஸிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற அம்சங்களும், கோமகி நிறுவனத்தின் 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கோமகி நிறுவனம் நிறைய கலர் ஆப்ஷன்களையும் (Colour Options) வழங்கியுள்ளது.
அவை சூப்பர் மெட்டல் க்ரே, கார்னெட் ரெட், ஜெட் பிளாக் மற்றும் ஃப்ராஸ்ட் ஒயிட் ஆகியவை ஆகும். கோமகி எக்ஸ்-ஒன் ப்ரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 49,999 ரூபாய் ஆகவும், கோமகி எக்ஸ்-ஒன் ஏஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 59,999 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (ex-showroom Price) ஆகும். தற்போதெல்லாம் இந்திய சந்தையில் ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள், விலையை குறைப்பதற்காக ஒரு யுக்தியை கையாளுகின்றன. இந்த யுக்தியின்படி பார்த்தால், வாகனங்களின் விலை தனியாக இருக்கும். பேட்டரியின் விலை தனியாக இருக்கும்.
எனவே இதுவும் இப்படிதானா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையானது, பேட்டரி, சார்ஜர் மற்றும் ஆக்ஸஸரீஸ் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக, இவற்றை குறிப்பிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில், பல்வேறு அதிநவீன வசதிகளுடன், நல்ல ரேஞ்ச் கிடைக்க கூடிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இவை மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்தியா முழுவதும் கோமகி எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 500க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்களை வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், உங்களுக்கு அருகில் உள்ள கோமகி எலெக்ட்ரிக் ஸ்டோர்களை அணுகலாம். தினசரி அலுவலகம் செல்வோர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போன்றவர்கள், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








