கேடிஎம்-க்கு லாபமே வேண்டாம் போலிருக்கு.. பெரிய தொகையை குறைச்சுட்டாங்க.. இந்த வருஷமே வாங்குறதுதான் பெஸ்ட்!!
குறைவான விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்குக் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கேடிஎம் (KTM) நிறுவனம் அதன் புகழ்பெற்ற பைக் மாடல் ஒன்றின் விலையை குறைத்திருக்கின்றது. 250 ட்யூக் (250 Duke) பைக் மாடலின் விலையையே அது குறைத்திருக்கின்றது. மாபெரும் தள்ளுபடியாக ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைப்புச் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இப்போது கேடிஎம் 250 ட்யூக் ரூ. 2.25 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலை குறைப்பானது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கேடிஎம் அறிவித்திருக்கின்றது. இந்த மாத இறுதி வரை மட்டுமே இந்த விலைக் குறைப்பானது நடைமுறையில் இருக்கும். ஆமாங்க, 2024 ஆம் ஆண்டு இறுதியை முன்னிட்டே இந்த சிறப்பு சலுகையை கேடிஎம் அறிவித்திருக்கின்றது.

முக்கியமாக ஆண்டு இறுதியை விற்பனை வளர்ச்சியுடன் முடிக்க வேண்டும் என்பதும் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே மிகப் பெரிய அளவில் விலைக் குறைப்பை கேடிஎம் நிறுவனம் செய்திருக்கின்றது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றன.
அந்தவகையில், கேடிஎம்-ம் அதன் டூ-வீலர்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த விலைக் குறைப்பை பலரும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றே நம்பப்படுகின்றது. விலைக்கு குறைப்பிற்கு முன்னர் வரை 250 ட்யூக் பைக் ரூ. 2.45 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.
கேடிஎம் 250 ட்யூக் ஓர் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட பைக் மாடல் ஆகும். இந்த பைக்கில் 249 சிசி லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 31 எச்பி மற்றும் 25 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது.
ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் பை-டைரக்சன் குயிக்ஷிஃப்டர் வசதிக் கொண்டதே இந்த கியர்பாக்ஸ் ஆகும். ஆற்றலை வெளியேற்றுவதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த பைக் மாடல் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், டிஎஃப்டி திரை, திருப்பத்திற்கு திருப்பம் விழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, மியூசிக்கை கன்ட்ரோல் செய்யும் வசதி, ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளையும் இந்த திரைக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களையே இந்த பைக் தன்னுள் தாங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலும், கவர்ச்சியான தோற்றத்தின் காராணமாகவும் இந்த பைக் இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றது.
இந்த நிலையிலேயே தற்போது விலைக் குறைப்பையும் கேடிஎம் நிறுவனம் செய்திருக்கின்றது. ஆகையால், இந்த மாத இறுதிக்குள் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை இது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என ரசிக பட்டாளமே உண்டு. இந்த நிலையிலேயே விலை குறைப்பை கேடிஎம் அறிவித்திருக்கின்றது. இது கேடிஎம் ட்யூக் பைக் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதியே விலையை அதிகப்படுத்த சில நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. பைக், கார் என பலதரப்பட்ட வாகனங்களின் விலை உயர உள்ளது. ஆகையால், விலை உயரும் முன்னரே பலர் வாகனங்களை வாங்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே வாடிக்கையாளர்களைக் கவரும் கேடிஎம் நிறுவனம் இந்த தரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








