ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!

மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதுடன் அவற்றை விளம்பரப்படுத்தும் விதமாக வேறு சில செயல்பாடுகளிலும் பைக் நிறுவனங்கள் ஈடுப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, வேகமாக செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீதான இளம் தலைமுறையினரின் ஆர்வத்தை குறையவிடாமல் பார்த்துக் கொள்ள ரேசிங் போட்டிகளை நடத்த வேண்டி இருக்கிறது.

அந்த வகையில், கேடிஎம் நிறுவனம் கோயம்புத்தூரில் அதன் கேடிஎம் கப் ரேசிங் போட்டியின் 2வது சீசனை சமீபத்தில் நடத்தியது. கோவையின் செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே ரேஸ் டிராக்கில் நடத்தப்பட்ட இந்த பைக் ரேசிங் பந்தயத்தை நமது டிரைவ்ஸ்பார்க் குழு நேரில் பார்வையிட்டது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்தியவற்றை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

கேடிஎம் கப் முதல் சீசனில் ஆண்கள் மட்டுமே போட்டியில் கலந்துக் கொண்டனர். ஆனால், இந்த 2வது சீசன் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண், பெண் என இரு பாலினரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகள் எந்தெந்த முறைகளில் நடத்தப்பட்டன? விதிமுறைகள் எதன் அடிப்படையில் பின்பற்றப்பட்டன? மற்றும் போட்டியின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

ktm cup season-2 racing championship

உலகளவில் பைக்குகள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்றான கேடிஎம் முதல்முறையாக சியட் டயர்கள் மற்றும் கேஸ்ட்ரல் பவர் நிறுவனங்களுடன் இணைந்து இந்த போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் கேடிஎம் ஆர்சி390 பைக்குகள் உடன் நடத்தப்பட்ட பந்தயங்கள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன. பைக் ரைடிங் கிட் இல்லாதவர்களுக்கு கேடிஎம் நிறுவனம் சார்பில் ரைடிங் கிட்டும் வழங்கப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 17:59 [IST]
English summary
Ktm cup season 2 racing championship at kovai kari motor speedway
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+